7ஆம் வகுப்பு என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் முகலாயர்கள், தில்லி சுல்தான்கள் வரலாறு நீக்கம்
கும்பமேளா, மோடி அரசின் திட்டங்கள், புனித யாத்திரைகள் சேர்ப்பு
புதுதில்லி ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள பள்ளி களுக்கு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம் (என்சிஇஆர்டி) பாடத் திட்டங்களை தயாரித்து புத்த கங்களை வெளியிடும் பணி களை மேற்கொண்டு வருகிறது. என்சிஇஆர்டி பாடப்புத்தகங்க ளை சிபிஎஸ்இ, கேந்தரிய வித்யாலயா மற்றும் நவோ தயா பள்ளிகள் பின்பற்றி வரு கின்றன. இந்நிலையில், என்சிஇ ஆர்டி (NCERT - National Council of Educational Rese arch and Training) 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து முகலாயர் கள் மற்றும் தில்லி சுல்தான்க ளின் வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அவற்றிற் குப் பதிலாக, மகதம், மௌரியர் கள், சாதவாகனர்கள் மற்றும் சுங்கர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சங்களைப் பற்றிய புதிய அத்தியாயங்கள் அறி முகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் புதிய புத்தகங் கள் தேசிய கல்விக் கொள்கை (NEP) - 2020 மற்றும் தேசிய பாடத் திட்ட கட்டமைப்பு (NCF) - 2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளன. 7ஆம் வகுப்பு என்சிஇஆர்டி பாடப்புத்தகத்தில் ‘எக்ஸ்ப்ளோ ரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியாண்ட், பாகம்-1’ என்ற தலைப்பிலான புதிய சமூக அறிவியல் புத்தகம், உத்த ரப் பிரதேசத்தின் அலகாபாத் தில் சமீபத்தில் நடந்த “கும்ப மேளா” மற்றும் “மேக் இன் இந்தியா” மற்றும் “பேட்டி பச்சாவ்-பேட்டி பதாவோ” போன்ற ஒன்றிய அரசின் திட்டங்கள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. “பூமி எவ்வாறு புனிதமா கிறது” என்ற அத்தியாயம், இந்தியாவிலும் வெளிநாட்டி லும் உள்ள அனைத்து மதங்க ளாலும் புனிதமாகக் கருதப் படும் இடங்கள் மற்றும் புனித யாத்திரைகள் குறித்த குறிப்புக் கள் இடம்பெற்றுள்ளன. இதில் 12 ஜோதிர்லிங்கங்கள், சார்தாம் யாத்திரை மற்றும் சக்திபீடங்கள் உள்ளிட்ட புனித மான புவியியல் இடங்களின் விவரங்கள் அடங்கும். இதே போல் ஜனபதா, சாம்ராஜ், ஆதிராஜா, ராஜாதிராஜா போன்ற சமஸ்கிருத வார்த்தை கள் பல்வேறு அத்தியாயங்க ளில் சேர்க்கப்பட்டுள்ளன. பள்ளிப் பாட புத்தகத்தில் முகலாயர்கள், தில்லி சுல்தான் கள் வரலாறு நீக்கப்பட்டதற்கும், மதம் சார்ந்த விஷயங்களை பாடமாகச் சேர்த்ததற்கும் நாடு முழுவதும் கண்டனம் வலுத் துள்ளது.