states

img

ஜார்க்கண்டில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறை

ஜார்க்கண்டில் இந்துத்துவா குண்டர்கள் வன்முறை

முஸ்லிம் குடியிருப்பு பகுதியில் கல்வீச்சு

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரி பாக் மாவட்டத்தின் ஜமா மஸ்ஜித் சௌக் என்ற பகுதி யில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்கள் ராம நவமி (ஏப்ரல் 6 அன்று கொண்டாடப்படுகிறது) கொண்டாட் டங்களை முன்னிட்டு மங்களம் என்ற பெயரில் ஊர்வலம் நடத்தினர். திங்களன்று நள்ளிரவு 11 மணியள வில் ஊர்வலத்தின் போது முஸ்லிம் மக்கள் வாழும் இடங்களில் வீடுகளை நோக்கி இந்துத்துவா குண்டர்கள் கல்வீச்சு தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரி விக்க, முஸ்லிம் மக்களுக்கும் -  இந் துத்துவா குண்டர்களுக்கும் மோதல் வெடித்தது. சம்பவ இடத்திற்கு உடனடி யாக விரைந்து வந்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி நிலைமையைக் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவந்தனர். மேலும் அப்பகுதி முழுவதும் பிஎன்எஸ் 163இன் கீழ் (முன்பு  144 தடை உத்தரவு) தற்காலிக ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.