states

img

மோடியின் வாரணாசி தொகுதியில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் கிறிஸ்துமஸ் உடையுடன் வந்த ஜப்பான் சுற்றுலா பயணிகளுக்கு கொலை மிரட்டல்

மோடியின் வாரணாசி தொகுதியில் இந்துத்துவா குண்டர்கள் அட்டூழியம் கிறிஸ்துமஸ் உடையுடன் வந்த ஜப்பான் சுற்றுலா பயணிகளுக்கு கொலை மிரட்டல்

வாரணாசி பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது வாரணாசி. இது கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள யாத்திரை தலமா கும். மோடி 3 முறை வாரணாசி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். இந்நிலையில், இந்த வாரணாசி யில் உள்ள “தசாஸ்வமேத காட்” என்ற கங்கை நதியின் நீராடும் பகுதிக்கு ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் (பெண்களும் இருந்தனர்) வந்தனர். கிறிஸ்துமஸ் உடையுடன் அவர்கள் கங்கை நதியில் குளிக்கச் சென்றனர். குளிக்க தயாரான போது, அங்கு இருந்த இந்துத்துவா குண்டர்கள்,”இங்கு கிறிஸ்தவர்கள் வரவே கூடாது; ஆனால் நீங்கள் கிறிஸ்து மஸ் உடை அணிந்து வந்துள்ளீர் கள். நீங்கள் குளிக்கக் கூடாது. மீறினால் நிலைமை மோசமாகி விடும்” என  கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும் ஜப்பான் சுற்றுலாப் பயணி குழுவில் இருந்த ஒரு இளைஞரை உட்கார வைத்து இந்துத்துவா குண்டர்கள் மிரட்டல் பாடம் எடுத்துள்ளனர். இதனால் ஜப்பான் சுற்றுலா பயணிகள் அச் சத்துடன் வாரணாசியை  விட்டு வெளியேறினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.