states

பஞ்சாப் கனமழை ஒரு மாத சம்பளம் வழங்கும் எம்எல்ஏக்கள்

பஞ்சாப் கனமழை

ஒரு மாத சம்பளம் வழங்கும் எம்எல்ஏக்கள்

பஞ்சாப் மாநிலத்தில் பெய்த கனமழையால் சட்லெஜ், ராவி உள்ளிட்ட நதிகளில் வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் பஞ்சாப் மாநிலம் இயல்பு நிலையை இழந்துள்ளது. இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கு வதற்காக திரட்டப்படும் முதலமைச்சர்  வெள்ள நிவாரண நிதிக்காக, அம்மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக பஞ்சாப் எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான பஜ்வா தெரிவித்துள்ளார்.