இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.9%தான்
புதுதில்லி அமெரிக்காவைச் சேர்ந்த உலக அளவிலான முத லீட்டு வங்கி மற்றும் பத்தி ரங்கள் நிறுவனமான கோல்டு மேன் சாச்ஸ் ஒரே மாதத்தில் 2ஆவது முறையாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை குறைத்து அறிக்கை வெளி யிட்டுள்ளது. ‘ஆசியாவின் எரிசக்தி விநியோ கத்தில் ஒரு நெருக்கடி (A Tighter Squeeze on Asia’s Energy Su pply)’ என்ற பெயரில் கோல்டுமேன் சாச்ஸ் வெளியிட்டுள்ள அறிக் கையில்,“மத்தியக் கிழக்கு போ ரால் ஆசிய அளவில் ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளின் வளர்ச்சி கணிப்பில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால் இந்தியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடு களின் பொருளாதார வளர்ச்சி கணிப்பு 0.5 சதவீதத்திற்கும் அதிக மாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலைமை மோசம் ஈரான் போருக்கு முன்பு 7 சதவீத மாக இருந்த இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு, மார்ச் 13 அன்று 6.5 சதவீதமாகக் குறைந்தது. தற்போது அது மேலும் குறைத்து 5.9 சதவீதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. காரணம், எரிசக்தி தேவைக் காக இந்தியா இறக்குமதியை அதிகம் நம்பியுள்ளது. மத்தியக் கிழக்குப் போரால் கச்சா எண்ணெய் விலையை விட, எரிவாயுவின் அளவு குறைவதே பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் தடையாக உள்ளது. கத்தார் எனர்ஜி போன்ற முக்கிய உற்பத்தியா ளர்களிடம் ஏற்பட்டுள்ள தடைக ளால், எரிசக்தி விநியோகம் குறைய வாய்ப்புள்ளது. இது எண்ணெய் யை விட எல்என்ஜி (LNG) விநி யோகத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும். அதிக வருமானம் கொண்ட நாடுகள் (ஜப்பான், கொ ரியா போன்றவை) அதிக எண் ணெய் இருப்புகளைக் கொண்டுள் ளன. ஆனால், குறைந்த தனிநபர் வருமானம் கொண்ட இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகள், எரிசக்தி தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் அதிக அபா யத்தில் சிக்கியுள்ளன. அதனால் கச்சா எண்ணெய் விலை உயர் வால், டாலர் வரவு மற்றும் செல வுக்கு இடையிலான வேறுபாடு அதி கரிக்கும். 2026-இல் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஜிடிபி-யில் 2% அல்லது அதற்கு மேல் இருக்கும் என்று கணிக் கப்பட்டுள்ளது. சில்லரை வணிகத்தில் தாக்கம் இந்தியாவின் பணவீக்க இலக்கு 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4.6 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பிற்குள் (2% முதல் 6% வரை) இருந்தா லும், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிய டைவது சில்லரை விலைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். போர் விரைவில் முடிவுக்கு வந்தால், ரிசர்வ் வங்கி வட்டி விகி தங்களை உயர்த்தாமல் அப்படியே வைத்திருக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில், வட்டி விகித உயர்வு தவிர்க்க முடியாததாக லாம்” என அதில் கூறப் பட்டுள்ளது. கடந்த காலங்களில் எண் ணெய் விலை உயர்ந்தபோது, வளைகுடா நாடுகளின் பொருளா தாரம் வளர்ந்ததால் இந்தியா விற்கு அந்நியச் செலாவணி (Remittances) அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அந்த நாடுகளே போரில் ஈடு பட்டுள்ளதால், ஏற்றுமதி மற்றும் பண வரத்து ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவது நாட்டின் பொருளாதார அதிர்ச்சி யை மிகவும் தீவிரமாக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
