states

img

ஸ்கேன் இந்தியா

மோசடி மாடல்

ஹல்காம் தாக்குதலில் சந்தோஷ் ஜக்தாலே என்பவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினருக்கு அரசு வேலை தருகிறோம் என்று பாஜக ஆளும் மகா ராஷ்டிர மாநில அரசு உறுதியளித்தது. சந்தோஷின் துணைவியார் கடுமையான மனநிலை பாதிப்புக்கு உள்ளானார். அரசு வேலை கிடைக்கும் என்று சொன் னதால், தான் பார்த்து வந்த தனியார் வேலையை உத றிவிட்டுத் தனது தாயாருக்கு உதவியாக மகள் ஆஷா வரி வந்துவிட்டார். 10 மாதங்கள் ஆகியும் இதுவரை யில் அரசுத் தரப்பில் இருந்து எந்தவிதத் தகவலும் இல்லை. இருந்த வேலையையும் விட்டுவிட்டதால் வரு மானம் இழந்து அந்தக் குடும்பம் தவித்து வருகிறது. அந்த வேலையிலாவது தொடர்ந்திருக்கலாம் என்று அம்மாவும், மகளும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது பிரச்சனையை எழுப்பினால்,”அங்கே, எல் லையில்..” என்று தொடங்கும் பாஜகவினரின் லட்சணம் இதுதானா என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

ஓட்டுக்குப் பண மாடல்

தெலுங்கானா மாநில உள்ளாட்சித் தேர்த லில் பணம் கொடுத்தும் பாஜகவி னர் தோற்றுப் போனதில் விரக்திய டைந்துள்ளனர். காங்கிரசுக்கு இணையாக வளர்ந்து விட்டோம் என்று பேசிக் கொண் டிருந்த பாஜகவினர், ஒரு படி மேலே போய் விட லாம் என்று நினைத்து, ஒரு ஓட்டுக்கு 3,000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், தெலுங்கானா மக்கள் தோற்கடித்து விட்டனர். சில வேட்பாளர்கள் தங்கள் வார்டுகளுக்குப் போய், கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டார் களாம். பலரும் “பணமே வரலை. உங்க ஆட்களே சுருட்டியிருப்பாங்க” என்று சொல்லிவிட்டார் கள். இன்னும் சிலரிடம் “எங்களுக்குத்தான் ஓட்டுப் போட்டோம்னு சத்தியம் பண்ணுங்க” என்று கேட்டிருக்கிறார்கள். “ரூபாய் குடுத்து ஓட்டு கேக்குறவங்ககிட்ட உண்மை சத்தியம், பொய் சத்தியம்னு என்ன இருக்கு.. இந்தாங்க, சத்தியம்” என்று அனுப்பியிருக்கிறார்கள்.

ரவுடி மாடல்

ரசு வேலைகளை மட்டுமல்ல, தனியார் ஒப்பந்த வேலைகளை எடுப்பவர்களும் “பாதுகாப்புத் தொகை”யை திரிணாமுல் ரவுடிகளிடம் கட்ட வேண்டும். இது எழுதப்படாத சட்ட மாக மேற்கு வங்க மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ளது. கொல்கத்தாவுக்கு சற்று வெளியில் உள்ள பராநகர் பகுதியில் சுதிப்தோ கோஷ் என்பவர் ஒரு பணியை ஒப்பந்த அடிப்படையில் எடுத்திருந்தார். அந்தப் பணியைச் செய்ய வேண்டுமானால் ஒரு லட்சம் ரூபாயை பாதுகாப்புத் தொகையாகத் தர வேண்டும் என்று அப்பகுதியில் உள்ள திரிணாமுல் குண்டர்கள் மிரட்டினார்கள். அவர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், அவரது வீட்டிற்கே  சென்று அடித்து, மிரட்டியிருக்கிறார்கள். காவல்துறை யில் புகார் செய்ததால் இரண்டு பேரை கைது செய்தி ருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், வீட்டிற்கு வந்து அடித்தவர்கள் சிலர் சுதந்திரமாக உலாவுவதைப் பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார் சுதிப்தோ.

டப்பா மாடல்

த்தரப்பிரதேசத்தில் உள்ள பள்ளியொன்றில் ஒரு லிட்டர் பாலை ஒரு பெரிய வாளியில் ஊற்றி, அது நிறைய தண்ணீரையும் ஊற்றி மாணவர்களுக்கு விநியோகித்துள்ளனர். அம்மாநிலம், மஹோபா மாவட்டம், திக்வாஹா கிராமத்தில் தான் இது நடந்துள்ளது. ஒரு லிட்டரில் சுமார் 15 லிட்டர் தண்ணீரைக் கலந்தி ருக்கிறார்கள். இது புரதம், கால்சியம் மற்றும் தேவையான கொழுப்புச் சத்து அனைத்தையும் குறைத்துவிடும். எவ்வ ளவு சத்துக்களை மாணவர்களுக்குக் கொடுக்க வேண்டுமோ, அவ்வளவு கிடைக்காது என்று சுகாதாரத்துறை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். லாபத்தை மட்டுமே குறியாகக் கொண்ட வர்த்த கர்கள் கூட இந்த அளவுக்குக் கலக்க மாட்டார்கள் என்று பெற்றோர்கள் குமுறியுள்ளனர். உத்தரப்பிரதேச மாடல் என்று இதைக்காட்டி, இழிவுபடுத்துகிறார்கள் பாஜகவினர் என்று எதிர்க் கட்சிகள் கண்டித்துள்ளன.