ஸ்கேன் இந்தியா
முதல்படி
2023 மே 3ஆம் தேதி முதல் மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை யில் 260 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் பேர் சொந்த மாநிலத்திலே அகதிகளாக வாழ்கி றார்கள். இரட்டை என்ஜின் அரசு என்று சொல்லிக் கொண்டாலும், மணிப்பூர் பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை. இப்போது திடீரென்று பத்தாயிரம் பேரை மார்ச் 31ஆம் தேதிக்குள் மறுகுடியமர்த்தப் போகிறோம் என்று மாநில தலைமைச் செயலாளர் அறி வித்திருக்கிறார். சொந்த வீடுகளுக்குத் திரும்ப இயலாத நிலைதான் நீடிக்குமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தகர்க்கப்பட்ட 7 ஆயிரம் வீடுகளைக் கட்டித் தருவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப் பட்டால்தான் எங்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று மக்கள் சொல்கிறார்கள். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசு ஆட்சியில் அமர்வதுதான் தீர்வுக்கு முதல்படி யாக இருக்கும் என்று அரசியல் ஆர்வலர்கள் கருது கின்றனர்.
வாரிசுதான்
அஜித் பவார் மரணத்தால் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களால் மகாராஷ்டிர அரசியல் கலகலத்துப் போயிருக்கிறது. அவரது மரணத்திற்கு சில நாட்கள் முன்பு நடந்த சந்திப்பில் பிப்ரவரி 8 ஆம் தேதி இரண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் இணையும் என்ற முடிவெடுக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால், தற்போது துணை முதல்வர் ஆகும் முடிவை சரத் பவார் குடும்பத்திற்கு சுநேத்ரா சொல்லவில்லை. அவரது தலைமையில் தேசியவாத காங்கிரஸ் தனியாகத் தொடர வேண்டும் என்பதையே முதலமைச்சர் பட்நாவிசும், துணை முதலமைச்சரும் ஏக்நாத் ஷிண்டேவும் விரும்புகிறார்கள். அதற்கு சுநேத்ராவும் தலையசைத்திருப்பாகச் சொல்லப்படுகிறது. பாஜவுக்குள் ஒரு சிலர், நாம் வாரிசு அரசியலை எதிர்க்கிறோமா, ஆதரிக்கிறோமா என்று கேட்கின்றனர். அவர்களுக்கு, பட்நாவிஸ் கூட அரசியல் வாரிசுதானே என்று கட்சிக்காரர்களே கிண்டலடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கபளீகரம்
அவசர, அவசரமாகக் கட்சி நிர்வாகிகளை பீகார் ராஷ்டிரிய லோக் மஞ்ச் தலைவர் உபேந்திர குஷ்வாஹா நியமித்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கட்சிக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள். அதில் மூன்று பேர் அண்மையில் நடந்த கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அடுத்த நாள், பாஜகவின் புதிய தலைவர் நிதின் நபினை சந்தித்துக் கொண்டிருந்தார்கள். அதிர்ந்து போனார் குஷ்வாஹா. ஒரேயொரு சட்டமன்ற உறுப்பினர்தான் மிச்சம். அது அவருடைய துணைவியார்தான். மற்ற உறுப்பினர்களில் இருவரை அழைத்துத் தனியாகச் சந்தித்தார். அதில் ஒருவரைக் கட்சியின் மாநிலத் தலைவராக ஆக்கிவிட்டார். கட்சியில் உள்ள மற்றவர்களுக்கு இதனால் கோபம். இதைக்கூட பாஜகவிடம் கேட்டுதான் ஏற்றுக் கொண்டிருப்பார் என்று பேசுகிறார்கள். எப்படியோ, மற்றொரு கூட்டாளியை பாஜக கபளீகரம் செய்கிறது.
சாதனை..!
தில்லிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. தில்லியில் பாஜக ஆட்சிக்கு வருவ தற்கு முன்பாக தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் என்பது கிட்டத்தட்ட இல்லை. முந் தைய பத்தாண்டுகளின் புள்ளிவிப ரங்களும் அதைத்தான் காட்டு கின்றன. ஆனால், கடந்த கல்வி யாண்டில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் படிப்பை இடையிலேயே விட்டு விட்டு நின்றிருக்கிறார்கள். நடப்பா ண்டில் அது மேலும் அதிகரித்துள் ளது. இடைநிலை வகுப்புகளில் நிலைமை பரவாயில்லை என்றா லும், அதற்கு அடுத்த நிலைகளில் மோசமாகியிருக்கிறது. அதி லும் குறிப்பாக, ஆண் மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாக இருப் பதைக் கல்வியாளர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
