உலகம் முழுவதும் வாழும் மலையாளிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் முக்கிய திட்டங்கள்
கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு!
திருவனந்தபுரம் உலகம் முழுவதும் வாழும் மலையாளிகளின் நல னைப் பாதுகாக்கும் நோக்கில், கேரள இடதுசாரி அரசு பல்வேறு முக்கியத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. கேரள சட்டமன் றத்தில் சபாநாயகர் ஏ.என். ஷம்சீர் தலைமையில் நடைபெற்ற 5ஆவது உலக கேரள சபையில், முதல மைச்சர் பினராயி விஜயன் இவற் றை நாட்டிற்கு அர்ப்பணித்தார். முக்கியத் திட்டங்கள்: Jஷெர்பா (SHERBA) தளம்: வெளி நாடு வாழ் முதலீட்டாளர்கள் கேரளாவில் பாதுகாப்பாகவும் வெளிப்படையாகவும் முதலீடு செய்ய வழிகாட்டும் அதிநவீன டிஜிட்டல் தளம். Jமாணவர் இடம்பெயர்வு தளம்: வெளி நாட்டிற்கு உயர்கல்விக்காகச் செல்லும் மாணவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அந்த நாட்டுச் சட்டங்கள் குறித்த துல்லியமான வழிகாட்டுதலை இது வழங்குகிறது. Jஆன்லைன் மருத்துவச் சேவைகள்: ‘உலக கேரளம்’ தளம் மூலம் பிப்ர வரி 15 முதல் மனநல மற்றும் ஆயுர்வேத ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. J விமான நிலைய உதவி மையம்: கொச்சி சர்வதேச விமான நிலை யத்தில் பாதுகாப்பான இடம்பெ யர்வை உறுதி செய்யப் பிரத் யேக உதவி மையம் தொடங்கப் பட்டுள்ளது. சபாநாயகர் உரை நிகழ்ச்சியில் பேசிய சபாநாய கர் ஏ.என். ஷம்சீர், “கேரளம் இன்று சிந்திப்பதை, இந்தியா நாளை சிந்திக்கிறது” என்பதை இச்சபை நிரூபிப்பதாக பெருமிதம் தெரிவித் தார். சாதாரண வீட்டுப் பணியா ளர்கள் முதல் ஓரங்கட்டப்பட்ட வர்களின் குரல் வரை இந்த ஜன நாயகச் சபையில் ஒலிக்கிறது என்றும், புதிய கேரளாவை உருவாக்கப் புலம்பெயர்ந்தோரின் அறிவையும் திறனையும் அரசு பயன்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
