முதல்...
நடைபெறவிருக்கும் 5 சட்டமன்றத் தேர்தல் களின் போது திரிபுராவின் தர்மாநகர் சட்ட மன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடக்கவிருக்கிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும், பிரதான எதிர்க் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அமிதவ தத்தா முதல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு விட்டார். கிராமப்பகுதிகளில் எளிய சந்திப்பு மூலம் மக்களைச் சந்தித்துள் ளார். பாஜக வேட்பாளர் தேர்வில் பெரும் குழப் பம் நிலவுகிறது. காங்கிரஸ் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இடைத்தேர்தலில் ஆளும் கட்சி ஒட்டுமொத்த பலத்தையும் செலுத்தும். அது சவாலாகத்தான் இருக்கும் என்றாலும், தேர்தல் நியாயமான முறையில் நடந்தாலே, ஆளும் பாஜக வேட்பாளரைத் தோற்கடித்து விட முடி யும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நம்புகிறார்கள். அமிதவ தத்தாவுக்கு தொகுதி முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.
இடையில்...
மேற்கு ஆசிய போரால் எந்தத் தட்டுப்பாடும் இல்லை என்று பாஜகவின் ஒன்றிய அரசும், அக்கட்சியும் தொடர்ந்து சொல்லிக் கொண்டி ருக்கின்றன. எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுப் புரளி கிளப்புகிறார்கள் என்று பழியைத் திருப்பு கிறார்கள். உணவகங்கள் மூடல், வாகனங்கள் முடக்கம் என்பதெல்லாம் நாடு முழுவதும்பளிச் சென்று தெரிகின்றன. இந்நிலையில் ட்ரிபிள் எஞ் சின் போட்டு ஓடும் தலைநகர் தில்லி நிர்வாகம் படு மோசமாக உள்ளது. கள்ளச்சந்தை தாராளமாகத் திறந்து விடப்பட்டிருக்கிறது. எரிவாயு உருளை வேண்டுமென்றால் 3,000 ரூபாய் கொடுக்க வேண்டுமாம். மக்கள் கோபத்தில் இருப்பதால் பாஜகவின் மக்கள் பிரதிநிதிகள் வெளியில் வரு வதில்லை. அவர்களுக்கு வேண்டியவர்கள்தான் இடையில் நின்று கல்லா கட்டுகிறார்கள். தலை நகருக்கே இந்த நிலைமை என்றால், மற்ற இடங்களில் எவ்வளவு மோசமாக இருக்கும் என்று மக்கள் புலம்பித் தள்ளுகிறார்கள்.
ஓரத்தில்...
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் அசாம் தேர்தலும் ஒன்றாகும். ஆட்சியில் உள்ள பாஜகவின் மீதான மக்கள் குற்றப்பத் திரிகை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கி றது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்தக் குற்றப்பத்திரிகையை மக்கள் மத்தியில் எடுத் துச் செல்கிறார்கள். முதலில் பத்தாயிரம், இரு பதாயிரம் நகல்கள்தான் எடுப்பதாகத் திட்டமிட்டி ருந்தனர். ஆனால் மக்கள் மத்தியில் கிடைத்த வர வேற்பால், மேலும், மேலும் அச்சிட்டு தற்போது பத்து லட்சம் வரையில் விநியோகமாகியுள் ளது. இந்த வரவேற்பால் ஆளும் பாஜக பதற்ற மடைந்துள்ளது. இதுவரை ஆட்சியாளர்கள் வெளியிட்ட அறிவிப்புகளை இது ஓரத்தில் நிறுத்திவிட்டது. எதிர்க்கட்சிகளிடையே எதிர் பார்த்த ஒற்றுமை ஏற்படாததால் மகிழ்ச்சியுடன் இருந்த பாஜக, எழுச்சியை எதிர்பார்க்க வில்லை. புதிய அறிவிப்பை வெளியிட்டு இதைக் குறைக்க முயற்சிக்கிறார்களாம்.
கடைசி
மாறி மாறிக் கூட்டணிகள் வைத்து பத்து முறை பீகார் முத லமைச்சராக இருந்த நிதிஷ் குமார், மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துள்ளார். முதலமைச்சர் பதவி யிலிருந்து விலகுவதாக அறிவித்த பிறகே இந்தப் பயணம் நடந்திருக்கிறது. இந்தப் பய ணத்தில் அவருடன் சொந்தக் கட்சிக்காரர்களை விட, பாஜககாரர்களே அதிகம் சென்றுள்ளனர். சில மாவட்டங்களில் அவரது கட்சிக்காரர் களை மேடைகளில் ஏறுவதற்குக்கூட அனுமதிக்க வில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. பீகாரில் இருந்து பிரிந்து செல்லும் பயணமா என்று கட்சிக்காரர்களில் சிலர் ஆதங்கத்துட னும், சிலர் கோபத்துடனும் கேட்கிறார்கள். இவர்கள் கேள்விக்குப் பதில் சொல்ல இரண் டாம் மட்டத் தலைவர்களிடம் ஒன்றும் இல்லை. பதவி விலகப்போவதே எங்களுக்குத் தெரியா மல்தானே இருந்தது என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்.
