states

நாடு முழுவதும் சுற்றுச்சூழல் விதிகள் சிதைக்கப்படுகின்றன உச்சநீதிமன்றம் தலையிட வேண்டுகோள்

நாடு முழுவதும் சுற்றுச்சூழல் விதிகள் சிதைக்கப்படுகின்றன உச்சநீதிமன்றம் தலையிட வேண்டுகோள்

ஆரவல்லி மலைத்தொடர் குறித்த தனது முந்தைய தீர்ப்பை உச்ச நீதிமன்றம்  நிறுத்தி வைத்துள் ளது. எனினும் மேலும் மூன்று முக்கிய மான சுற்றுச்சூழல் விவகாரங்களில் நீதி மன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.  ராஜஸ்தான் அரசும், ஒன்றிய  அரசும் இணைந்து சரிஸ்கா புலி காப்பகத்தின் எல்லையை மாற்றியமைக்கத் திட்ட மிட்டுள்ளன. அவ்வாறு எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டால் அப்பகுதியில் மூடப் பட்டிருக்கும் 57 சுரங்கங்கள் மீண்டும் திறக் கப்படும். சுரங்கங்களை திறக்கவே திட்ட மிட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக் கப்பட்டு வருகிறது.  இந்தத் திட்டம் வன விலங்கு பாதுகாப்பிற்கு எதிரானது. சுற்றுச்சூழல் விதிகளை மீறி, முறை யாக அனுமதி பெறாமல் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு, பின்னாள்களில் அனு மதி வழங்கும் முறையும் உள்ளது.   இது தொடர்பான தனது முந்தைய தீர்ப்பையும் நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2010 இல் உருவாக்கப்பட்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பாஜக அரசு அம்பானி, அதானி போன்றவர்களின் நிறுவனங்களுடன் வைத்துள்ள நட்புற வின் காரணமாக கடந்த பத்து ஆண்டு களில்  தனது அதிகாரங்களை இழந்து வரு கிறது. அதாவது சுற்றுச்சூழல் தொ டர்பான வழக்குகளை விசாரிக்கும் அந்த  அமைப்பை பாஜகவுடன்  நட்புறவு வைத்துள்ள முதலாளிகளின் நிறுவனங் கள், இயற்கையை அழித்து லாபம் சம்பா திக்க ஏதுவாக பாஜக அரசு மூலம் பல வீனப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இவ்வமைப்பு சுதந்திரமாகச் செயல்படு வதை உறுதி செய்ய உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும். அதாவது ஆர வல்லி மலைத்தொடர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் காட்டிய அதே அக்கறையை, இந்த மூன்று விவகாரங்களிலும் காட்ட வேண்டும் என்றும், அப்போதுதான் இந்தியாவின் இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும் என்றும்  சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.