மலம் கலந்த குடிநீர்: இந்தூரில் 8 பேர் பலி
பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் மலம் உள்ளிட்ட கழிவுகள் கலந்த குடிநீரை குடித்ததால் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். பகீரத்புரா பகுதியில் குடிநீர்க் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. அந்தக் குழாய்க்கு நேர் மேலே ஒரு கழிப்பறை ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. கசிவு ஏற்பட்ட நிலையில் அதன் வழியாக மலம் உள்ளிட்ட கழிப்பறை கழிவுகள் கலந்துள்ளன. இந்த மாசுபட்ட குடிநீரைக் குடித்த தன் காரணமாக அப்பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் 6 பெண்கள் உட்பட 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். அசுத்தமான குடிநீரே இதற்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், நந்தலால் பால் (70), ஊர்மிளா யாதவ் (60), தாரா கோரி (65) ஆகிய மூவர் மட்டுமே வயிற்றுப்போக்கால் உயிரி ழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. அரசின் நடவடிக்கை இந்தச் சம்பவத்திற்கு இரங்கலைத் தெரிவித்த மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், சிகிச்சையில் இருப்பவர்களின் முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். சுகாதாரப்பணிகளில் கவனக்குறை வாக இருந்ததாகக்கூறி மாநகராட்சி மண்டல அதிகாரி, உதவிப் பொறியா ளர் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளனர். மேலும், பொறுப்பு துணைப் பொறியாளர் ஒருவர் பணியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளார். இந்த உயிரி ழப்புகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.