states

உயர்கல்வி நிறுவனங்களில் சமூக நீதியை உறுதி செய்க! யுஜிசியின் புதிய விதிமுறைகள் குறித்து இந்திய மாணவர் சங்கம் அறிக்கை

உயர்கல்வி நிறுவனங்களில் சமூக நீதியை உறுதி செய்க! யுஜிசியின் புதிய விதிமுறைகள் குறித்து இந்திய மாணவர் சங்கம் அறிக்கை

புதுதில்லி உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிப் பாகுபாடுகளைக் களைவதற்கான பல்கலைக் கழக மானியக் குழுவின் (யுஜிசி) 2026-ஆம் ஆண்டு புதிய விதிமுறைகளை இந்திய மாணவர் சங்கம் அங்கீக ரிப்பதாக சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம். சாஜி மற்றும் பொதுச் செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச் சார்யா ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் வெளி யிட்டுள்ள விரிவான அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு: பத்தாண்டுகாலப் போராட்டத்தின் விளைவு பல்கலைக்கழகங்களில் நிலவும் சாதிப் பாகுபாடுகளை அகற்றக் கோரி மாணவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் பல ஆண்டுகளாக முன்னெ டுத்த தொடர் போராட்டங்களுக்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றியாகவே இந்த விதிமுறைகளை நாங்கள் பார்க்கிறோம்.  குறிப்பாக, ஆய்வு மாணவர் ரோஹித் வெமுலாவின் ‘நிறுவனப் படுகொலை க்குப்’ பிறகு, போதுமான பாதுகாப்பு  வழிமுறைகளைக் கோரி உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பின்னணியிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, இந்த விதிமுறைகள் வரலாற்றுச் சூழலை அங்கீகரிக்கும் வகையில் ‘ரோஹித் வெமுலா’ பெயரிலேயே அழைக்கப்பட வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்துகிறது. எதார்த்தமான புள்ளிவிவரங்கள் ரோஹித் வெமுலா மறைந்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும், உயர்கல்வி நிறுவனங்களில் சாதிப் பாகுபாடு தொடர்பான புகார்கள் 118 சதவீதம் அதிகரித்துள்ளதாக யுஜிசி தரவுகளே தெரிவிக்கின்றன. உயர்கல்வி யில் சேரும் பட்டியல் சாதி (SC) மாண வர்களின் எண்ணிக்கை 14 சதவீதமாக இருந்தாலும், பேராசிரியர்களின் பங்க ளிப்பு வெறும் 6 சதவீதமாக மட்டுமே உள்ளது. தற்போதைய சம வாய்ப்பு மையங்கள் (EOC) மற்றும் எஸ்சி/எஸ்டி பிரிவுகள் தன்னாட்சி அதிகாரம் இன்றி பல்கலைக்கழக நிர்வாகத்தின் பிடியில் இருப்பதால், அவற்றின் நடுநிலைமை சிதைக்கப்பட்டுள்ளது என்பதே யதார்த்தம். ஜனநாயகத்தன்மை கொண்ட சீர்திருத்தம் தேவை புதிய விதிமுறைகளில் இதர பிற்படுத்தப்பட்ட (OBC) பிரிவினரையும் உள்ளடக்கியது வரவேற்கத்தக்கது. இருப்பினும், இக்குழுக்களுக்குத் துணைவேந்தர்களே தலைமை தாங்கு வது என்பது நடைமுறையில் ஒருதலைப் பட்சமான போக்கை உருவாக்கும். மாறாக, இக்குழுக்களில் நடுநிலையான நீதித்துறைப் பிரதிநிதிகள் இடம்பெற வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாகத்தால் நியமிக்கப்படாமல், பட்டியல் சாதி, பழங்குடி, இதர பிற் படுத்தப்பட்டோர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கிய ‘தேர்ந்தெடுக்கப்பட்ட’ பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். குறிப்பாக, மாண வர் பிரதிநிதிகள் ‘தகுதி’ என்ற பெயரில் நியமிக்கப்படாமல், தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட வேண்டும். ரோஹித் சட்டமே தீர்வு யுஜிசி விதிமுறைகள் ஒரு தொடக்கமே தவிர, முழுமையான தீர் வல்ல. பல்கலைக்கழக நிர்வாகத்திலி ருந்து சுதந்திரமான ஒரு சட்டப்பூர்வக் குழுவை உருவாக்குவதுடன், சமூகப் புறக்கணிப்பு மற்றும் தற்கொலைக்குத் தூண்டுதல் போன்றவற்றைத் தெளிவான குற்றங்களாக வரை யறுக்கும் ‘ரோஹித் சட்டம்’ (Rohith Act) இயற்றப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நிறுவனம் தான் ‘நிரபராதி’ என்பதை மெய்ப்பிக்கும் பொறுப்பை (Burden of Proof) ஏற்கச் செய்யும் வகையில் சட்டத்திருத்தம் அமைய வேண்டும். வகுப்புவாத அரசியலுக்கு எதிர்ப்பு சங் பரிவார் தலைமையிலான ஒன்றிய ஆட்சியில், சாதிப் படிநிலை யைத் திணிக்கும் மனுவாதக் கோட்பாடு கள் கல்வி நிறுவனங்களில் ஊக்கு விக்கப்படுகின்றன. ஐஐடி தில்லி மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் நடக்கும் அத்து மீறல்கள் இதற்குச் சான்று. அரசியலமை ப்பு வழங்கும் சமத்துவ உரிமையைப் பாதுகாக்க, மாணவர் மற்றும் பொது மக்களின் கூட்டுப் பங்களிப்புடன் இந்திய மாணவர் சங்கம் சமரசமின்றிப் போரா டும். சமத்துவம் என்பது வெறும் வழி காட்டுதல் அல்ல, அது ஒவ்வொரு மாண வருக்குமான அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.