states

தீக்கதிர் விரைவு செய்திகள்

சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகலை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை

மதுபானக் கொள்கை விவகாரத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறி சத்தீஸ்கர் முன்னாள் முதலமை ச்சரும், காங்கிரஸ் பொதுச் செயலாளரு மான பூபேஷ் பாகலின் மகன் சைதன் யாபாகல் வீட்டில் (பிலாய்நகரம்) திங்களன்று அமலாக்கத்துறை அதிகாரி கள் சோதனையில் ஈடுபட்டனர்.

சைதன்யா பாகல் வீடு மட்டுமின்றி, அவ ருக்கு தொடர்புடைய 15-க்கும் மேற்பட்ட இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பொய் வழக்கு “கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்த பொய் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

ஆனால் பூபேஷ் பாகல் வீட்டிற்குள் நுழைந்து “அமலாக்கத்துறை விருந்தினர்கள்” சோதனை செய்து வருகின்றனர். இந்த சதித்திட்டம் மூலம் பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸை தடுக்க முடியும் என்று யாராவது நினைத்தால், அது தவ றான புரிதலாக அமையும்” என  பூபேஷ் பாகலின் அலுவலகம் தனது டுவிட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் லாரி - கார் மோதல் :

8 பேர் பலி மத்தியப்பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் பஹ்ரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அப்னி பெட்ரோல் நிலையம் அருகே திங்க ளன்று அதிகாலை 2.30 மணியளவில் கார்  (எஸ்யுவி) - லாரி பயங்கர வேகத்தில் மோதின.

இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் லேசான காயத்துடனும், 9 பேர் பலத்த காயமும் அடைந்தனர். இந்நிலையில், படுகாயமடைந்த வர்களில் மேலும் ஒருவர் திங்களன்று மதியம் உயிரிழந்தார். இதன்மூலம் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.