அனில் அம்பானி நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை
ரூ.3,000 கோடி வங்கி கடன் மோசடி
மும்பை பிரதமர் மோடிக்கு நெருக்க மானவரும், நாட்டின் முதன்மையான பணக் காரர்களில் ஒருவருமான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நபராக இருந்தார். இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராகவும் திகழ்ந் தார். ஆனால் மோடி பிரதமர் ஆன பின்பு எல்லாம் தலைகீழாக மாறி யது. தொழிலில் திடீர் நஷ்டம் அடைந்து அனில் அம்பானி திவால் நிலைக்கு சென்றார். ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2019 வரையி லான காலகட்டத்தில் யெஸ் வங்கியில் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனங்கள் 3,000 கோடி ரூபாய் கடனாக வழங்கி இருக்கிறது. 2017-18 நிதியாண்டில் ரூ.3,742.60 கோடி யாக இருந்த ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட் (RHFL) நிறுவனக் கடன் வழங் கல், 2018-19 நிதியாண்டில் ரூ. 8,670.80 கோடியாக உயர்ந்தி ருப்பது தெரியவந்தது. யெஸ் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்ததாக அனில் அம் பானி மற்றும் அவருடைய நிறு வனங்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதற்கிடையே சுமார் ரூ.2,200 கோடி கடனை திரும்ப செலுத்தா ததன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுத லின்படி, ஜூன் 13ஆம் தேதி அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (RCom) நிறு வனத்தை “மோசடி” என்று பாரத ஸ்டேட் வங்கி வங்கி அறி வித்தது. இதனை ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை அன்று தெரிவித்தார். இந்நிலையில், சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு அடிப்படையில் அமலாக்கத் துறை வியாழனன்று அனில் அம்பானி மற்றும் அவருடைய நிறுவனங்கள் மட்டுமில்லாமல், 25 நபர்களையும் அமலாக்கத் துறையின் விசாரணை வளை யத்திற்குள் கொண்டு வந்தது. குறிப்பாக தில்லி, மும்பையில் அனில் அம்பானிக்குச் சொந்த மான மற்றும் நெருக்கமான 35 இடங்கள் என 50க்கும் மேற் பட்ட நிறுவனங்களில் வியாழ னன்று இரவு வரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தியதாக செய்தி கள் வெளியாகியுள்ளன.