ஜனநாயகத்தை அழிக்கும் தீய முயற்சி தேர்தல் ஆணையத்தின் எஸ்ஐஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடத்தை ஜனநாயகத்தை அழிப்ப தற்கான “தீய திட்டம்” என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும், 12 மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடக்கும் விதம் “மிகவும் ஏமாற்றம்” அளிப்ப தாகவும் கூறியுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத் திட்டத்திற்கு எதிராக வரும் டிசம்பர் முதல் வாரத்தில் தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் மாபெ ரும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன கார்கே, “வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மையைப் பாது காப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது”. ஜனநாயக அமைப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கை ஏற்கெனவே குறைந்திருக்கும் நேரத்தில், எஸ்ஐஆர்-இன் போது தேர்தல் ஆணையத்தின் நடத்தை மிகவும் ஏமாற்றமளிக்கிறது. தாங்கள் பாஜகவின் நிழலில் இயங்க வில்லை என்பதையும், தாங்கள் அரசிய லமைப்புச் சட்டத்தின் மீதான சத்தியப் பிரமாணத்தையும், ஆளும் கட்சிக்கு அல்லாமல் இந்திய மக்களுக்குத் தான் விசுவாசமாக இருக்கிறோம் என்பதை யும் தேர்தல் ஆணையம் உடனடியாக நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஆணையம், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்க முயற்சிக்கிறது என்ற உணர்வு நிலவுகிறது. இந்த எஸ்ஐஆர் திட்டத்தின் வடிவமைப்பே வாக்காளர்களை நீக்குவதுதான். இதை நாங்கள் பீகாரிலும் பார்த்தோம், இப்போது 12 மாநிலங்களிலும் பார்க்கி றோம். தேர்தல் ஆணையத்தின் இந்தத் திட்டம் “நாட்டில் உள்ள ஜனநாயகத்தை அழிக்கும் ஒரு தீய செயல்” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி. வேணுகோபால் குற்றம் சாட்டியுள்ளார்.
