சிபிஎம் மகாராஷ்டிரா மாநிலச் செயலாளராக டாக்டர் அஜித் நவாலே தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மகா ராஷ்டிரா மாநில மாநாடு பிப்ரவரி 27ஆம் தேதி மராத்வாடா பிராந்தி யத்தில் உள்ள பர்பானி மாவட்டத் தின் செலு என்ற இடத்தில் தொடங்கி யது. மார்ச் 1 வரை, 3 நாட்கள் நடை பெற்ற இந்த மாநாடு மூத்த தலை வர்கள் நரசய்யா ஆதம், உதயன் சர்மா, தத்தா மானே மற்றும் சிவ கொண்டா கோட்டு ஆகியோரின் கொடியேற்றத்துடன் தொடங்கி யது. அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் (ஒருங்கிணைப்பாளர்), நிலோத் பால் பாசு, டாக்டர் அசோக் தாவ்லே மற்றும் பிரதிநிதிகள் தியாகி களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி னர். இதனுடன் சோலாப்பூரைச் சேர்ந்த கலைக் குழுவான பிரஜா நாட்டிய மண்டல் புரட்சிகரப் பாடல்களைப் பாடியது.
337 பிரதிநிதிகள்...
பிரகாஷ் காரத் தொடக்க உரை நிகழ்த்தினார். 29 மாவட்டங்களி லிருந்து 337 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் 63 பெண்கள் (19%) அடங்குவர். குறிப்பாக பிரதிநிதிகளில் 50 சதவிகிதத்திற் கும் அதிகமானோர் 50 வயதுக்கு குறைவானவர்கள் ஆவர். பிரதி நிதிகள் அமர்வில் அரசியல்- அமைப்பு அறிக்கையை டாக்டர் உதய் நர்கர் முன் வைத்தார். இந்த அறிக்கையின் 4 அச்சிடப்பட்ட பிரி வுகள் அனைத்து பிரதிநிதி களுக்கும் விநியோகிக்கப்பட்டன. 59 பிரதிநிதிகள் விவாதத்தில் பங்கேற்றனர். அதில் 15 பேர் (25%) பெண்கள் ஆவர். மாநில செயலாளரின் பதிலுக்குப் பிறகு, அறிக்கை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் சமூக-அரசியல் பிரச்சனைகள் குறித்த 8 தீர்மானங்களும் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
சிவந்தது செலு...
மாநாட்டின் முதல் நாளன்று (பிப்., 27) மாலையில் ஆயிரக்கணக் கான உழைக்கும் மக்களின் ஈர்ப்பு மிக்க பேரணி செலு வழியாக அணி வகுத்துச் சென்று பொதுக்கூட்டத் திடலை அடைந்தது. பேரணியின் போது செங்கொடியால் செலு நகர வீதிகள் சிவந்தன. பொதுக்கூட்டத் தில் பிரகாஷ் காரத், டாக்டர் அசோக் தாவ்லே, டாக்டர் உதய் நர்கர், நரசய்யா ஆதம், ஜே.பி.காவித், மரியம் தாவ்லே, டாக்டர் அஜித் நவாலே, டாக்டர் டி.எல் கராத், வினோத் நிகோல் எம்எல்ஏ மற்றும் பலர் உரையாற்றினர். மாநாட்டின் இரண்டாவது நாளில் (பிப்., 28) இடதுசாரிக் கட்சி கள் சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பேராசிரியர் ராம் பகேட்டி, இந்தியப் பொதுவுடமை (மார்க்சியம்-லெனினியம்) விடு தலை கட்சியின் அஜித் பாட்டீல், லால் நிஷான் கட்சியின் பீம்ராவ் பன்சோத் மற்றும் சத்யசோதக் கம்யூனிஸ்ட் கட்சியின் கிஷோர் தமாலே, மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஜெயந்த் பாட்டீல் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். கடைசி நாள் (மார்ச் 1) மாநாட்டில் தகுதி ஆய்வுக்குழு அறிக்கையை அஜய் புரண்டே சமர்ப்பித்தார். நிலோத்பால் பாசு நிறைவுரையாற்றினார்.
இளம் வயது மாநிலச் செயலாளர்
கடைசி நாள் மாலையில் 15 உறுப்பினர்களைக் ( 2 பேர் பெண்கள்) கொண்ட மாநிலச் செயற்குழு உட்பட 50 பேர் கொண்ட மாநிலக்குழு தேர்ந்தெடுக்கப்பட் டது. இதில் 12 பேர் பெண்கள் (24%) ஆவர். உடல்நலக்குறைவு கார ணமாக டாக்டர் உதய் நர்கர் மீண்டும் மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக் கப்படுவதை பணிவுடன் மறுத்துவிட் டார். அதனால் 47 வயதே ஆன டாக்டர் அஜித் நவாலே புதிய மாநிலச் செயலாளராக தேர்ந் தெடுக்கப்பட்டார். மூன்று உறுப்பினர்களைக் கொண்ட மாநில கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவராக பேராசிரியர் மது பரஞ்சபே (பெண்) தேர்ந்தெடுக்கப் பட்டார். 3 பெண்கள் (18 சதவீதம்) உள்ளிட்ட 17 பிரதிநிதிகள், 1 பெண் (33 சதவீதம்) உள்ளிட்ட 3 பார்வை யாளர்கள் மதுரையில் நடைபெறும் 24ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். டாக்டர் அசோக் தாவ்லே தனது முடிவுரையில் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக பார்பனி தோழர்களை பாராட்டி னார். மேலும் கடந்த சில ஆண்டு களின் மிகக் கடினமான சூழ்நிலை களில் ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைத்து பிரதிநிதிகளையும் பாராட்டினார். வரும் காலங்களில் இடதுசாரி மற்றும் மதச்சார்பற்ற சக்தி களின் ஒற்றுமையை பராமரித்து வலுப்படுத்தவும், போராட்டங் களை நடத்துவதில் கவனம் செலுத்தவும், சித்தாந்தப் போராட்டத்தை வலுப்படுத்தவும், நமது சுயேச்சையான வலிமையை அதிகரிக்க வலுவான அமைப்பை உருவாக்கவும் டாக்டர் அசோக் தாவ்லே அழைப்பு விடுத்தார்.
ரூ.50,000 மதிப்புள்ள இலக்கியங்கள் விற்பனை
தொடர்ந்து சிபிஎம் பார்பனி மாவட்டக்குழு மற்றும் அனைத்து தன்னார்வலர்களும் இந்த மாநில மாநாட்டை ஒரு பெரிய வெற்றியாக்கியதற்காக அரங்கி லேயே பாராட்டப்பட்டனர். சர்வ தேசிய கீதத்துடன் மாநாடு மிகுந்த உற்சாகத்துடன் முடிவடைந்தது. இந்த மாநில மாநாட்டில் ரூ.50,000 மதிப்புள்ள கட்சி மற்றும் முற்போக்கு இலக்கிய நூல்கள் விற்பனையாயின.