பணி நீக்கப்பட்ட பெண் நீதிபதிகளுக்கு மீண்டும் வேலை!
புதுதில்லி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி 2 பெண் நீதிபதிகள் வேலைநீக்கம் செய்யப்பட்ட அலகாபாத் உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்து, அந்த இரு நீதிபதிகளுக்கும் மீண்டும் வேலை அளித்து, உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் பி.வி.நாக ரத்னா தலைமையிலான அமர்வாயம் தீர்ப்ப ளித்துள்ளது.
அண்மையில் உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பினை அளித்திட்ட நீதிபதி பி.வி.நாக ரத்னா, நீதித்துறையின் பல்வேறு படிநிலை களில் பெண்கள் வேலைக்கு சேர்வது அதிக ரித்துள்ள இன்றைய நிலையில், அவர்களின் நலன் குறித்தும் கூருணர்வுடன் நடந்துகொள்ள வேண்டிய தருணமும் வந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார். கீழமை நீதிமன்றங்களில் வேலைப் பளு மிக அதிகமாகும். நிலுவையில் உள்ள வழக்குக ளும் மிக அதிகமாகும். இந்நிலையில் பெண் நீதித்துறை அலுவலர்களிடம் கூருணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும் என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. விளக்கத்தை கவனத்தில் கொள்ளாமல்... மத்தியப் பிரதேச மாநிலத்தில் பணிபுரிந்து வந்த இரு பெண் நீதிபதிகள் “திறனற்றவர்” (“inefficiency”) என்றும், “தவறான நடத்தை உள்ளவர்” (“misconduct”) என்றும் கூறப் பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள். இவர்களில் ஒருவர் கருச்சிதைவுக்கு ஆளாகி, அவசர சிகிச்சைப் பிரிவில் கோவிட் தொற்று நோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தவர்.
இவ்வாறு அவர் விளக்கம் அளித்திருந்தபோதிலும், இவற்றை அலகாபாத் உயர்நீதிமன்றம் கணக்கில் எடுத்து க்கொள்ளாமல் அவரை பணிநீக்கம் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வி. நாகரத்னா, நீதித்துறையில் கூருணர்வுடனான வேலை சூழ்நிலை அளிக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பிரதிபலிக்கிறது என்று கூறி னார். நீதித்துறையிலும் பெண்கள் மேலும் மேலும் நீதிபதிகளாகவும் மற்றும் பலவிதமான படிநிலைகளில் அதிகாரிகளாகவும் வந்துகொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் இது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். 34 பேரில் இருவரே பெண் நீதிபதிகள் தீர்ப்பின்போது நீதிபதி நாகரத்னா மேலும் “அதிக பெண் பிரதிநிதித்துவம் மற்றும் சமத்துவ உணர்வைக்கொண்ட நீதித்துறையானது அர சாங்கத்திற்கும், நாடாளுமன்றம்/சட்டமன் றங்களுக்கும் முன்மாதிரியாக செயல்பட வேண்டும்” என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
34 நீதிபதிகள் உள்ள உச்சநீதிமன்றத்தில் தற்போது நீதிபதி நாகரத்னா மற்றும் ஒரு பெண் நீதிபதி ஆக இரண்டு பேர் மட்டுமே பெண்களாவார்கள். இரண்டு பெண் நீதிபதிகளும் வேலைநீக்கம் செய்யப்பட்டிருப்பது ‘தான்தோன்றித்தனமான நடவடிக்கை’ (‘arbitrary move’) என்றுகூறிய நீதிபதி, அவர்களின் பணிநீக்க உத்தரவுகளை ரத்து செய்து, சவிதா சவுத்ரி மற்றும் அதிதி குமார் சர்மா ஆகிய இரு நீதிபதிகளுக்கும் மீண்டும் வேலை வழங்கி உத்தரவு பிறப்பித் தார். அவர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதா னது, ’தண்டனைக்குரிய, தான்தோன்றித்தன மான மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கை களாகும்’ (“punitive, arbitrary and illegal”) என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார். பதினைந்து நாட்களுக்குள் அவர்களிரு வரும் மீண்டும் வேலைக்கு எடுத்துக்கொள்ளப் பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார்.