states

img

ஆளும் கட்சியாக இருந்தும் பாதுகாப்பு, நீதி கிடைக்கவில்லை உயிரிழப்பதற்கு முன்பு மோடிக்கு மணிப்பூர் பாஜக எம்எல்ஏ கடிதம்

ஆளும் கட்சியாக இருந்தும் பாதுகாப்பு, நீதி கிடைக்கவில்லை உயிரிழப்பதற்கு முன்பு மோடிக்கு மணிப்பூர் பாஜக எம்எல்ஏ கடிதம்

இம்பால் 2023ஆம் ஆண்டு மே 4 அன்று அப்போ தைய மணிப்பூர் முதலமைச்சர் என்.பைரேன் சிங் தலைமையில் நடந்த அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ வுங்சாகின் வால்டே இம்பாலில் “அரம்பாய் தெங்கோல்” என்ற மெய்டெய் ஆயுதக்குழுவினரால் கொடூ ரமாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலால் அவருக்கு மூளையில் கடுமையான காயம் ஏற்பட்டது. உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. நீண்ட கால சிகிச்சை க்குப் பிறகும், அவரது உடலின் ஒரு பக்கம் செயலிழந்தது. படுக்கையிலேயே முடங்கியி ருந்த அவர் பிப்., 20 அன்று ஹரியானாவின் குர்கானில் உயிரிழந்தார். இறப்பதற்கு 5 மாதங்களுக்கு முன்பு, அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அக்கடி தத்தில் தாக்குதல் சம்பவம் மற்றும் தனது காயங்களை குறிப்பிட்டு விட்டு வுங்சாகின் வால்டே மேலும்,“பிரதமர் மோடி அவர்களே! நான் உயிருடன் இருக்கும் பிணம் போல வாழ்கி றேன். என்னைத் தாக்கியவர்கள் மீது இதுவரை எந்த ஒரு நியாயமான விசாரணையும் நடத்தப் படவில்லை. எனவே, சிபிஐ அல்லது என்ஐஏ மூலம் உயர்மட்ட விசாரணை நடத்தி குற்றவாளி களைத் தண்டிக்க வேண்டும். நான் ஆளும் கட்சியின் (பாஜக) சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், மாநில அரசு எனக்கு உரிய பாது காப்பையோ அல்லது நீதியையோ வழங்க வில்லை. குக்கி-ஜோ பழங்குடியின மக்கள் இம்பால் பள்ளத்தாக்கில் பாதுகாப்பாக வாழ முடியாது என்பதால், அவர்களுக்கு ஒரு ‘தனி நிர்வாகம்’ அல்லது ஒரு யூனியன் பிரதேசம் வழங்கப்பட வேண்டும்” என அதில் கூறியிருந்தார். மோடி மவுனம் இந்த கடிதம் வுங்சாகின் வால்டே இறந்த பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எனினும், இதுதொடர்பாக பிரதமர் மோடியோ, அவரது அலுவலகமோ எவ்வித விளக்கமும் அளிக்க வில்லை. ஆனால் தற்போதைய மணிப்பூர் துணை முதலமைச்சர் லோசி டிக்ஹோ பிரத மர் மோடிக்கு வால்டே அளித்துள்ள கடிதம் தொடர்பாக கூறுகையில்,“தாக்குதல் நடத்திய வர்களைக் கைது செய்ய அவகாசம் தேவைப் படலாம். ஆனால் நாங்கள் அனைத்து தட யங்களையும் பின்தொடர்ந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.