states

img

அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைதுக்கு ஜனநாயக ஆசிரியர் முன்னணி கடும் கண்டனம்

அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைதுக்கு  ஜனநாயக ஆசிரியர் முன்னணி கடும் கண்டனம்

சட்டரீதியாக தவறானது ; ஜனநாயகத்தின் அடித்தளங்களையே சீர்குலைக்கிறது

புதுதில்லி “ஆபரேசன் சிந்தூர்” தொடர்பாக சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக அசோகா பல்கலைக்கழக (ஹரியானா மாநிலம் சோனிபட்டில் உள்ளது) அரசியல் அறிவியல் துறையின் தலைவரும், இணைப் பேராசிரியரு மான டாக்டர். அலி கான் மஹ்முதாபாத்தை கைது செய்ததற்கு ஜனநாயக ஆசிரியர் முன்னணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜனநாயக ஆசிரியர் முன்னணியின் தலைவர் ராஜீப் ரே, செயலா ளர் அபா தேவ் ஹபீப் ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில்,”அசோகா பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர். அலி கான் மஹ்முதாபாத் கைதை ஜனநாயக ஆசி ரியர் முன்னணி கடுமையாகக் கண்டிக்கிறது. “இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் செயல் கள்” என்ற குற்றச்சாட்டின் பேரில் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 152-இன் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை,  கருத்து வேறுபாட்டைக் குற்றமாக்கவும், கல்வி சுதந்திரத்தை ஒடுக்கவும்  சட்டவிதிகளை தவ றாகப் பயன்படுத்துவதாகும்.   மஹ்முதாபாத்தின் சமூக ஊடகப் பதிவு கள் போரின் மனிதாபிமான விலையை எடுத்து ரைப்பதோடு, போர்வெறியை மட்டுமே விமர்சிக் கின்றன. அவரது கருத்துக்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (ஏ)-இன் கீழ் பாதுகாக்கப்படும் கருத்துரிமையின் எல்லைக் குள் வருகின்றன. குறிப்பாக மஹ்முதாபாத்தின் கருத்துகள், சமூக முரண்பாடுகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதன் அவ சியத்தை வலியுறுத்துகின்றன. இத்தகைய விமர்சனங்களை “தேசத்துரோகம்” அல்லது “இறையாண்மைக்கு அச்சுறுத்தல்” என்று காட்டுவது சட்டரீதியாக தவறானது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அடித்தளங்களையே சீர்குலைக்கிறது.

பாஜகவின் தூண்டுதல்

மஹ்முதாபாத் மீதான வழக்கு பாஜக நிர்வாகியின் புகாரின் பேரில் மட்டுமே தொடுக் கப்பட்டது. இது அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட தாகத் தெரிகிறது. இது ஆளுங்கட்சியின் (பாஜக) பெரும்பான்மைக் கருத்தை எதிர்க்கும் குரல்களை அடக்குவதற்காக சட்டத்தை தவறா கப் பயன்படுத்தும் முயற்சியாகும். மேலும், ஹரியானா மகளிர் ஆணையம் அவரது கருத்து களை தவறாக விளக்கி, “பெண் அதிகாரி களை அவமதித்தது” என்றும் குற்றம் சாட்டி யுள்ளது. ஆனால், மஹ்முதாபாத் பதிவுகள் இரா ணுவத்தின் திறமையைப் பாராட்டியவை யாக இருந்த போதிலும், சமூக ஒடுக்குமுறையிலி ருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின.   மஹ்முதாபாத்தின் கைது ஒரு அபாயகர மான முன்மாதிரியை ஏற்படுத்துகிறது. அர சாங்கக் கொள்கைகளை விமர்சிப்பது, எவ்வ ளவு நியாயமானதாக இருந்தாலும் அது தண்டனைக்கு உள்ளாகலாம் என்ற செய்தியை மஹ்முதாபாத்தின் கைது எடுத்துரைக்கிறது. மேலும் மஹ்முதாபாத்தின் கைது ஜனநாய கத்தின் முக்கிய அங்கமான கருத்துச் சுதந்திரம் மற்றும் கல்வி சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது. அதே நேரத்தில், ஆளுங்கட்சியின் (பாஜக) தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள், வெறுப்புச் சொற்கள் மற்றும் சமூகப் பிளவு படுத்தும் பேச்சுக்களை சட்டவிரோதமாகப் பரப்புவதில் சுதந்திரமாகச் செயல்படுகின்றனர். இந்நிலையில், டாக்டர். அலி கான் மஹ்முதா பாத் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெற்று, அவரை உடனடியாக விடுதலை செய்ய ஜனநாயக ஆசிரியர் முன் னணி வலியுறுத்துகிறது. அதே போல கல்வி யாளர்கள் மற்றும் ஜனநாயக ஆர்வலர்கள் கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதலை அரசி யலமைப்பு வழிமுறைகள் மூலம் எதிர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜேஎன்யு, அசோகா பல்கலை. ஆசிரியர்கள் சங்கமும் கண்டனம்

மஹ்முதாபாத் கைதுக்கு ஜவ ஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசி ரியர்கள் சங்கம் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில்,”அசோகா பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசி ரியர் டாக்டர். அலி கான் மஹ்முதாபாத்தை ஹரியானா காவல்துறையினர் முற்றிலும் தேவையற்ற முறையில் கைது செய்ததற்கு தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆளுங்கட்சி (பாஜக) நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பேராசிரியர் மஹ்முதாபாத்தின் சில அறிக்கைகளை ஹரி யானா மாநில மகளிர் ஆணையம் தனது அதி கார வரம்பிற்கு அப்பால் தானாக முன்வந்து விசாரித்ததைத் தொடர்ந்து அலி கான் மீது ஒடுக்குமுறை அரங்கேறியுள்ளது” என அதில் கூறப்பட்டுள்ளது. இதே போல அசோகா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கமும் கண்டனம் தெரி வித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

தன் மீதான கைது நடவடிக்கையை கண்டித்தும், இதுதொடர்பான வழக்கை உடனடியாக விசாரிக்கக் கோரியும் பேராசிரியர் மஹ்முதாபாத் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். திங்களன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு, மஹ்முதாபாத் சார்பாக ஆஜ ரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்,”பேரா சிரியர் மஹ்முதாபாத் தனது தேசபக்தி அறிக்கைகளுக்காக கைது செய்யப்பட் டுள்ளார். அவரது கருத்துக்கள் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார். விசார ணைக்கு இந்த வழக்கை விரைவாக பட்டிய லிடுங்கள்” எனக் கோரிக்கை விடுத்தார். கபில் சிபலின் வாதத்தை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்,” பேராசிரியர் மஹ்முதா பாத் மீதான வழக்கை மே 20 அல்லது 21-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும்” எனக் கூறினார்.