states

img

“தில்லி விஷவாயு அறையாக மாறிவிட்டது”

“தில்லி விஷவாயு அறையாக மாறிவிட்டது”

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி., வில்சன் மாநிலங்களவையில் பேசுகையில்,”காற்று மாசுபாடு என்பது இனி ஒரு சட்டரீதியான கவலை அல்ல. மாறாக ஒரு தேசிய அவசரநிலை ஆகி விட்டது. தேசிய தலைநகரில் நெரிசலைக் குறைக்கும் முயற்சிகள் அவசியமா கிறது. தலைநகர் தில்லியில் நிலவும் காற்று மாசுபாடு வேறு எங்கும் காணப் படவில்லை. தில்லி ஒரு விஷவாயு அறையாக மாறிவிட்டது. குடிமக்கள் உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறும் போது நாடாளுமன்றம் அமைதியாக அமர்ந்திருக்க முடியாது. 2025ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பின் பாதுகாப்பு தரநிலைகளுக்கு பொருந்தக் கூடிய ஒரு நாளையும் தில்லி கண்ட தில்லை. மாசுபாட்டால் தில்லியில் மக்கள் 8 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலத்தை இழந்து வருகின்றனர். காற்று மாசு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 17,000 மக்கள் தில்லியில் உயிர் இழக்கிறார்கள். இந்த ஏழு நபர்களில் ஒருவர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்ப தால் உயிர் இழக்கிறார். அண்டை மாநில மான ஹரியானா மற்றும் பஞ்சாபில் பயிர் கழிவுகளை எரிப்பதுதான் தில்லி யின் மாசுபாட்டிற்கு ஒரே காரணம் அல்ல.  வாகன உமிழ்வுதான் மிகப்பெரிய காரண மாகும்” என அவர் பேசினார்.