states

தீக்கதிர் விரைவு செய்திகள்

முஸ்லிம் மக்களின் இறைச்சி கடையை அகற்ற தில்லி பாஜக அரசு தீவிரம்

தில்லி சட்டமன்ற கேள்வி நேரத்தின் போது நவராத்திரி திருவிழாவிற்கு முன்னதாக தில்லி மாநில அனை த்து நடைபாதைகளிலும், கடைகளிலும் வெளிப்படையாக இறைச்சி விற்கப்படு வது குறித்து பாஜக எம்எல்ஏ கர்னைல் சிங் புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தில்லி துணை முதலமைச்சர் பர்வேஷ் வர்மா,“நவராத்திரி விழாவுக்கு முன்ன தாகவும், நவராத்திரி காலங்களிலும் இறைச்சி விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து அதிகாரிகளுக்கும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தங்கள் தொகுதிகளில் ஆக்கிரமிப்பு சம்பவங்கள்  (இறைச்சி கடை தொடர்பாக) ஏற்பட்டால் புகாரளிக்க வேண்டும்” என அவர் கூறினார். நவராத்திரி காலங்களிலும் இறைச்சி விற்பனைக்குத் தடை என தில்லி பாஜக அரசு கூறினாலும், படிப்படியாக மாநிலம் முழுவதும் இறைச்சிக்கு தடை விதிக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக  முஸ்லிம் மக்களின் இறைச்சி கடையை மூடுவதற் காக, சட்டவிரோதமாக இறைச்சி விற்பனை செய்தால் அவர்களின் கடை அகற்றப் படும் என பர்வேஷ் வர்மா மறைமுகமாக எச்சரித்துள்ளார்.

கருப்புப் பணத்தை கைப்பற்றாமல்  வாட்ஸ் அப்களை கண்காணிக்கும் மோடி அரசு

நாடாளுமன்றத்தில் தற்போது நடந்துவரும் பட்ஜெட் கூட்டத் தொடருக்கான இரண்டாவது அமர்வில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்  வருமான வரி மசோதா மீதான விவாதத்தின் போது, “நாட்டில் உள்ள தனிநபர்களின் வாட்ஸ் அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டுள்ளது” எனக் கூறினார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது டுவிட்டர் எக்ஸ், பதிவில், “வெளி நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டு வருவோம்” என்ற முழக்கத்து டன் இந்த சர்வாதிகார ஆட்சி (மோடி அரசு) அதிகாரத்தில் அமர்ந்தது என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தின் போது வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை பிரதமர் மோடி ஒவ் வொரு பைசாவையும் திரும்பக் கொண்டு வருவார் என்றே பாஜகவினர் கூறினார் கள். ஆனால்  அதே பாஜகவினர் உங்கள்  அன்புக்குரியவர்களுக்கும் நெருங்கிய வர்களுக்கும் நீங்கள் என்ன சொல்கி றீர்கள், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க விரும்புகிறார்கள் என்று  சொல்கிறார்கள்” என அதில்கூறப் பட்டுள்ளது.