தில்லி சட்டமன்ற தேர்தல் ஆம் ஆத்மிக்கு சமாஜ்வாதி ஆதரவு
70 தொகுதிகளைக் கொண்ட தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடை பெறும் என்றும், தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை மதியம் அறிவித்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் கூறு கையில், “தில்லி சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை நிறுத் தாது. ஆம் ஆத்மிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்” என அவர் கூறினார். ஆம் ஆத்மியில் பகுஜன் சமாஜ் தலைவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தில்லி மாநில முன்னாள் தலைவர் மதன் மோகன் மற்றும் அவரது மனைவி சுதேஷ்வதியும் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். “மதன் மோகன் மற்றும் அவரது மனைவி ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தது மகிழ்ச்சியளிக்கிறது” என ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறினார்.
எச்எம்பிவி வைரஸ் பரவல் பயப்பட எதுவும் இல்லை! சவுமியா சாமிநாதன் பேட்டி
ஜெனிவா, ஜன. 7- “எச்எம்பிவி வைரஸ் பரவுவது சாதாரணமானது தான் அதில் பயப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!” என உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை ஆராய்ச்சியாளர் சவுமியா சாமிநாதன் தெரிவித்துள்ளார். எச்எம்பிவி வைரஸை, சிலர் கொரோனாவுடன் ஒப்பிட்டு மக்கள் மத்தியில் பீதியையும் சமூகத்தில் பதற்றத்தையும் உருவாக்கி வரும் நிலையில், “2001-ஆம் ஆண்டே தோன்றிய இந்த வைரசை கொரோனாவுடன் ஒப்பிட்டு பார்க்கக் கூடாது” என தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் சர்வதேச மருந்தியல் துறை பேராசிரியர் நீரஜ் கூறியுள்ளார். எச்எம்பிவி வைரஸை பொறுத்தவரை, ஒரு மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு காற்றுவழியாகப் பரவும். தொற்று பாதிக்கப்பட்ட நபரின் சுவாசப்பாதையில் இந்த வைரஸ் தொற்றை உருவாக்கும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் எளிதாக பாதிப்பை சந்திப்பார்கள் என்று கூறப்படும் நிலையில், “ஒரு மனிதனுக்கு உடலில் இருக்க வேண்டிய போதுமான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தாலே இந்த எச்எம்பிவி வைரஸ் தொற்றைத் தைரியமாக எதிர் கொள்ளலாம்” என்று பேராசிரியர் நீரஜ் குறிப்பிட்டுள்ளார். எனினும் முகக்கவசம் அணிய வேண்டும் என வழிகாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திற்கு டியுஜே வாழ்த்து
சென்னை ,ஜன.7- விழுப்புரத்தில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (T.U.J.) வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புருஷோத்தமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர் இயக்கத்தின் தலைவராக, விவசாயிகள் இயக்கம்,மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவராக, வாச்சாத்தி மக்களுக்காக போராடிய களநாயகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெ.சண்முகத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் (T.U.J.) வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. சாதி, மதம்,இனவெறியை தமிழகத்திலிருந்து அகற்ற, விவசாயிகள், தொழிலாளர்கள்,அனைத்து பகுதி மக்களின் நலன் காக்கும் போராட்டத்தில், பத்திரிகை -ஊடகவியலாளர்கள், உங்களுடன் இணைந்து பயணிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
யுஜிசி நெட் தேர்வு தேதியை மாற்றுக : முதல்வர் கடிதம்
சென்னை,ஜன.7- பொங்கல் உள்ளிட்ட நாள்களில் நடைபெறும் யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடும் ஜனவரி 13 முதல் 16 ஆம் நாள் வரை யுஜிசி-நெட் தேர்வு களை நடத்திட தேசியத் தேர்வு முகமையால் அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஒன்றிய கல்வி அமைச்சரின் உடனடி கவனத்திற்கு கொண்டுவந்து அத்தேர்வுகளை வேறொரு நாளில் மாற்றி யமைக்கக்கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர். இந்தப் பொங்கல் பண்டிகையைப் போலவே, ஆந்திரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும். இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றிய மைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள் ளார். ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்குமாறும் ஒன்றிய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழ்நாட்டில் மற்றும் பல மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றி யமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
தங்கபாலுவுக்கு காமராஜர் விருது
சென்னை,ஜன.7- 2024 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் காம ராஜர் விருது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலை வர் தங்கபாலுவுக்கு அறி விக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை யில், 2006 ஆம் ஆண்டு முதல் காமராஜர் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டிற்கான விருதுக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான கே.வி.தங்கபாலு தேர்வு செய்யப் பட்டுள்ளார். அவருக்கு விருதுடன் ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப் பதக்கம் வழங்கப்படும். வரும் 15ஆம் தேதி இந்த விருதை சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப். 5- தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்! ஈரோடு கிழக்கிற்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு
புதுதில்லி, ஜன. 7 - தில்லி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் பிப்ரவரி 5 அன்று ஒரே கட்டமாக நடைபெறு கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார், தில்லி சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதியை அறிவித்தார். “தில்லி சட்டப்பேரவைத் தேர்தலானது, ஒரே கட்டமாக பிப்ரவரி 5 அன்று நடை பெறும்; வேட்புமனு தாக்கல் ஜனவரி 10 அன்று துவங்கும். வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜனவரி 17. மறுநாள்- அதாவது, ஜனவரி 18 அன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீல னை நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற ஜனவரி 20 கடைசி நாளாகும். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 5 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறி வித்த தலைமைத் தேர்தல் ஆணையர், “பதிவான வாக்குகள் பிப்ரவரி 8-ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப் படும்” என்றும் கூறினார். தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேர வை தேர்தலில் மொத்தம் உள்ள 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 8 தொகுதிகளில் வென்றது, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. ஆனால், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றி விடுவது என்பதில் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. 100 கோடியை நெருங்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை! முன்னதாக செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்த ராஜிவ் குமார், “இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண் ணிக்கை 99 கோடியைத் தாண்டியுள்ளது. வாக்களிப்பு, பெண்கள் பங்கேற்பு ஆகியவற்றில் புதிய சாதனைகளை நாங்கள் உருவாக்கியுள்ளோம். விரைவில் 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் என்ற புதிய சாதனையை இந்தியா பெறும்” என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் பிப்.5-இல் தேர்தல்
தில்லி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் தொடர்பான அறிவிப்பினை வெளியிட்ட இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம், அந்த தேர்தலோடு சேர்த்தே, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலும் பிப்ரவரி 5 அன்று நடைபெறும் என அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் டிசம்பர் 14 அன்று காலமானதையொட்டி, இங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.