தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல் 85 ஊராட்சிகளில் சிபிஎம் வெற்றி!
ஹைதராபாத் தெலுங்கானாவில் சமீ பத்தில் நடந்த உள்ளாட் சித் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 85 கிராம ஊராட்சிகளில் வெற்றி வாகை சூடியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊராட்சிப் பதவிகள் காலியாக இருந்தது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாத இந்த சூழலைப் பயன் படுத்திக்கொண்ட மாநில அரசு சுமார் 12,000 ஏக்கர் கிராமப் பொது நிலங்களைத் தனியார் நிறுவ னங்களுக்கு குத்தகைக்கு விட்டது. இது பொதுமக்களிடையே அதி ருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் பல்வேறுகட்ட போராட்டத்திற்கு பிறகு தெலுங்கா னா உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 11, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 12,652 ஊராட்சித் தலைவர்கள் பதவிகளுக்கும், 75,725 பேர் வார்டு உறுப்பினர் பதவி களுக்கும் தேர்தல் நடைபெற்றது. பண பலம், மிரட்டல்கள், தாக்கு தல்கள் உள்ளிட்ட நெருக்கடிக ளுக்கு மத்தியிலும், சிபிஐ(எம்) வேட்பாளர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளனர். உள்ளூர் நிர்வாகத்தை வலுப் படுத்துவது, கிராமப்புற நிலங்க ளைப் பாதுகாப்பது, கிராம மக்க ளின் கோரிக்கைகளை அரசுக்கு சொல்வது போன்ற பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று சிபிஐ(எம்) தெலுங்கானா மாநிலக்குழு உறுதியளித்துள்ளது.
