சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன்
கேரள உள்ளாட்சித் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி எதிர்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை. மக்களின் முடிவை ஏற்கிறோம். ஆனால் கேரள இடது ஜனநாயக முன்னணியின் அரசியல் அடித்தளம் உறுதியாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன்
நாம் மோடியின் புதிய இந்தியாவில் வாழ்கிறோம். பாஜக ஆளும் உத்தரப்பிரதேசத்தில் கொலைகாரர்களும், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களும் கொண்டாடப்படு வார்கள். வங்கி மோசடி செய்பவர்கள் தப்ப வைக்கப்படுவார்கள். இறுதியில் எல்லா மோசடிக்காரர்களும் பாஜகவில் இணைவார்கள்.
ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்
இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகிவிட வேண்டும் என ஆர்எஸ்எஸ்காரர்கள் துடிக்கிறார்கள். ஆனால் உண்மையான விஷயம் என்னவென்றால், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக தங்களின் விரல் நகங்களை கூட ஆர்எஸ்எஸ்காரர்கள் இழந்ததில்லை.
கேரள சிபிஐ மாநிலச் செயலாளர் பினோய் விஸ்வம்
பாஜக மற்றும் காங்கிரசுக்கு இடையே நீண்டகாலமாக மறைமுகமான ஒப்பந்தம் இருப்பது மீண்டும் கேரள உள்ளாட்சித் தேர்தல் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்வோம். ஆனால் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசியலில் வீழ்ச்சி எதுவும் இல்லை.
