states

img

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் 5 மாதங்களில் 78 குழந்தைகள் உயிரிழப்பு

பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவில் 5 மாதங்களில் 78 குழந்தைகள் உயிரிழப்பு

மும்பை மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சரா கவும், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகியோர் துணை முதலமைச்சர்களாகவும் உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் 5 மாதங்க ளில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரணமாக 78 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை பாஜக கூட்டணி அரசாங்கமே சட்டமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ உமா காப்ரே எழுப்பிய கேள்விக்கு குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிதி வர்தா சுனில் தட்கரே (பெண் - தேசியவாத காங்கிரஸ் (அஜித்)) விளக்கம் அளித்தார். அதில், “மெல்காட் மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு காரண மாக 5 மாதங்களில் 78 குழந்தைகள் உயிரி ழந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம் பாடு, சுகாதாரம், பழங்குடியினர் மேம்பாடு போன்ற தொடர்புடைய துறைகளின் சார்பில் குழு அமைக்கப்படும்” என அவர் கூறினார்.

பாஜக கூட்டணியில் தீவிரமடையும் விரிசல்

பொதுவாக ஒரு மாநில சட்டமன்றத்தில் ஆளும் அரசாங்கத்தை நோக்கி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்புவார்கள். ஆனால் மகாராஷ்டிரா வில் ஆளும் கூட்டணிக்குள்ளேயே கேள்வி எழுப்பி, கூட்டணிக்குள் விரி சலை தீவிரப்படுத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பாஜக எம்எல்ஏ உமா காப்ரே குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பாக அரை மணிநேரம் கேள்வியுடன் விவாதம் நடத்தினார். மேலும் குழந்தைகள் நலத்துறையை கடுமையாக விமர்சித்தார். மகாராஷ்டிரா  குழந்தைகள் நலத்துறையை கவனிக்கும் அதிதி வர்தா தேசியவாத காங்கிரஸ் (அஜித்) கட்சியைச் சேர்ந்தவர் என்ற நிலையில், பாஜக எம்எல்ஏ உமா காப்ரேவின் விமர்சனத்து க்கு அஜித் பவார் பிரிவு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் மகாராஷ்டிரா பாஜக கூட்டணியில் விரிசல் தீவிரமடைந்துள்ளது மீண்டும் அம்பலமாகியுள்ளது.