லாரியில் தேசியக் கொடி ஏற்றிய சிபிஎம் தலைவர்கள்
நாட்டின் 77ஆவது குடியரசு தினவிழா திங்களன்று கொண்டாடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற, நடைபய ணத்தின் போது மிகுந்த ஒழுக்கத்துட னும், உற்சாகத்துடனும், பேரணியின் முன்னால் சென்ற லாரியின் உச்சியில் தேசியக் கொடி முறைப்படி ஏற்றப் பட்டது. டாக்டர் அசோக் தாவ்லே தேசியக் கொடியை ஏற்ற, மற்ற தலை வர்கள் தேசியக் கொடிக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, அங்கு கூடியிருந்த பெரும்திரளான மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த, தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
