சோனம் வாங்சுக்கை சந்திக்க சிபிஎம் தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு
ஜோத்பூர் கடந்த செப்., 24 அன்று யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரி லே நகரில் நடை பெற்ற போராட்டத்தில் திடீரென வன்முறைச் வெடித்தது. இந்த வன்முறைச் சம்பவங்களில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடை ந்தனர். 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் போராட்டத்தை தூண்டியதாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காலநிலை ஆர்வலர் சோ னம் வாங்சுக் கைது செய்யப் பட்டு, ஜோத்பூர் சிறையில் (ராஜஸ்தான்) அடைக்கப் பட்டார். இந்நிலையில், சோனம் வாங்சுக்கை சந்திக்க ஜோத்பூர் சிறைக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்க ளுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது சர்ச்சையை ஏற் படுத்தியுள்ளது. இதுதொ டர்பாக சிபிஎம் மத்தியக்குழு தனது டுவிட்டர் எக்ஸ் பக் கத்தில்,”லடாக்கில் போராடி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள சோனம் வாங்சுக்கை சந்திக்க அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும், மக்களவை உறுப்பினருமான அம்ரா ராம் மற்றும் ராஜஸ்தான் மாநிலச் செயலாளர் கிஷன் மேக்வால் உட்பட பலர் ஜோத்பூர் சிறை க்குச் சென்றனர். ஆனால் காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். சோனம் வாங்சுக் கை சிறையில் சந்திக்க முயன்ற முதல் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தான்” என அதில் கூறப்பட்டுள்ளது.