states

img

ஆந்திராவில் நவ., 1 முதல் 7 வரை தொடர் போராட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெண்கள், குழந்தைகள், தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள் ஆகியவற்றை எதிர்த்து நவம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய மக்கள் போராட்டம் நடத்த உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆந்திரப் பிரதேச மாநி லக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர் பாக விஜயவாடாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாநிலச் செயலாளர் வி. சீனிவாச ராவ் கூறுகை யில், “விலைகள் தாறுமாறாக உயர்ந்து விட்டதால், அத்தியாவசியப் பொருட் களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. தசரா பண்டிகையின் போது விலை வாசி உயர்வின் தாக்கம் அறிய முடிந்தது.  அதனால் ரேஷன் கடைகள் மூலம் அத்தி யாவசியப் பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 

வேலை எங்கே?

ஆந்திராவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் வேலையில்லா இளைஞர்கள் வேலையில் அமரு வோம்  என்ற நம்பிக்கையில் இருந்தனர்.  ஆனால் ஆந்திர அரசு டிஎஸ்சி (ஆசிரி யர் ஆட்சேர்ப்புத் தேர்வு) தேர்வை ஒத்தி வைத்தது. அதே போல ஆந்திர அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (ஏபிபிஎஸ்சி) தலைவர் நியமிக்கப்படாத தும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஆட்சேர்ப்பு பணியை உடனடி யாக தொடங்க வேண்டும். மேலும் பிபிபி முறையில் மருத்துவக் கல்லூரிகளை தனியார் மயமாக்கும் மாநில அரசின் முடிவைப்  திரும்பப் பெற வேண்டும். பெண்கள் பாதுகாப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருவது குறித்து கவலை அளிக்கிறது. காணாமல் போகும் சிறுமிகளின் எண்ணிக்கை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. முந்தைய ஆட்சியில் இருந்து மாறுபட்ட ஆட்சியை வழங்குவதாகக் கூறிய தற்போதைய ஆளும் கூட்டணியின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாநி லத்தில் தற்போதும் ஊழல் தலை விரித்தாடுகிறது.  மணல் மற்றும் மது மாபியாக்கள் செழித்து வளர்கின்றன. அதனால் அத்தியாவசியப் பொருட் களின் விலைவாசி உயர்வு, பெண்கள், குழந்தைகள், தலித்துகளுக்கு எதிரான அட்டூழியங்கள், விசாகப்பட்டினம் உருக்காலை தனியார்மயமாக்கல், ஒரே நாடு ஒரே தேர்தல் முறை ஆகிய வற்றை எதிர்த்து நவம்பர் 1 முதல் 7ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய மக்கள் போராட்டம் நடத்த உள்ளோம். தொடர்ந்து நவம்பர் 8 அன்று மாநி லத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் மற்றும் மண்டல அலு வலகங்களிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்” என அவர் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின் பொழுது சிபிஎம் ஆந்திர மாநிலக் குழு உறுப்பினர் செ.பாபு ராவ் உடனிருந்தார்.