ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணை ப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். அக் கடிதத்தில் பாஜக செய்யும் தவறான செயல்களுக்கு ஆர் எஸ்எஸ் அமைப்பும் உடந்தையாக இருக் கிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளது என காங்கிரஸ் மூத்த தலை வர் சந்தீப் தீட்சித் குற்றம் சாட்டி யுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், காங்கிரஸ் ஆர்எஸ்எஸ் தலைவருக்கு கடிதம் எழுதுவது கெஜ்ரி வாலுக்கும் சங்பரிவாருக்கும் உள்ள தொடர்பைக் காட்டுகிறது. இப்போது மட்டுமல்ல கெஜ்ரிவாலுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு, நாங்கள் காலங் காலமாக கூறி வருகிறோம். அதனால் தான் கெஜ்ரிவாலை “சங்கி” என்று அழைக்கிறோம். எந்தவொரு காங்கிரஸ் தலைவரும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை எதிர்க்கும் எந்த அரசியல்வாதியும் இதுபோன்ற கடிதம் எழுத மாட்டார்கள். கெஜ்ரி வாலுக்கு பாஜகவுடன் பிரச்சனைகள் இருந்தால் அவர் நேரடியாக பாஜக விடம் பேச வேண்டும். ஆனால் ஆர்எஸ் எஸ் அமைப்புடன் பேசுவது தவறானது. ஆர்எஸ்எஸ்-க்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியது, அவர் அவர்களை கூட்டாளி களாக பார்க்கிறார் என்பதைக் குறிக்கி றது. ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் போது, ஆர்எஸ்எஸ் அவருக்கு ஆதர வளித்தது. அவரது உண்மையான விசு வாசம் தெளிவாக உள்ளது” என அவர் கூறினார்.