சிபிஎஸ்இ பொது தேர்வுகள் இன்று முதல் தொடக்கம்
மத்திய கல்வி பாடத்திட்டமான சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கு கிறது. தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிக மானோர் எழுதும் இந்த தேர்வு ஏப்ரல் முதல் வாரம் வரை நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித பாடமும், 21ஆம் தேதி ஆங்கிலமும், 25ஆம் தேதி அறிவியலும், மார்ச் 2ஆம் தேதி இந்தி தேர்வும், மார்ச் 7ஆம் தேதி சமூக அறி வியல் பாட தேர்வும் நடைபெறுகிறது. அதே போல சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய்க்கிழமை உடற்கல்வி தேர்வு 20ஆம் தேதி இயற்பி யல், 28 ஆம் தேதி வேதியியல், மார்ச் 9ஆம் தேதி கணிதம் ஆகிய பாடங்களு க்கு தேர்வுகள் நடைபெறுகின்றன.
