states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா

தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில், இந்தி மொழியை ஒன்றிய அரசு திணிக்க முயற்சிக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்தி முதல் மொழியாக உள்ள மாநிலங்களில் என்ன நடக்கிறது? கல்வியறிவு நிலை ஏன் உயரவில்லை? என்பதை ஒன்றிய அரசு முதலில் ஆராய வேண்டும்.

கர்நாடக மகிளா காங்கிரஸ் தலைவர் சவுமியா

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக மோசமான அளவில் அதிகரித்து வருகின்றன. நாட்டில் துளியளவு கூட பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. எனவே பெண்களாகிய நாங்கள் சமத்துவம் மற்றும் பாதுகாப்பைக் கோருகிறோம்.

ஆம் ஆத்மி மூத்த தலைவர் துர்கேஷ் பதக்

தில்லி தேர்தல் பிரச்சாரத்தின் போது மார்ச் 8 அன்று ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்குகளிலும் மாதந்தோறும் ரூ.2500 திட்டத்தின் முதல் தவணை செலுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் மார்ச் 8 அன்று தான் தில்லி பாஜக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது. இது மோசமானது.

ஆர்ஜேடி மூத்த தலைவர் ராப்ரி தேவி

பீகார் மாநிலத்தில் 2025ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் பாஜக - ஜேடியு கூட்டணியை வீழ்த்தப்பட்டு, கண்டிப்பாக எதிர்க்கட்சிகளின் கூட்டணி ஆட்சி அமையும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்.