states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா

உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியப் பொருளாதாரம் உருவெடுத்துள்ளது என்று சொல்கிறார்கள். விலைவாசி உயர்வு, வறுமை  நிலவுகிறது. ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகின்றனர், இதுதான் நிதர்சனம். பிரதமர் மோடி இதைப் புரிந்துகொண்டு பதில் சொல்ல வேண்டும்.

ஊடகவியலாளர் ரவிந்திர சிங் ஷியோரன் 

இஸ்லாமிய பெண் மருத்துவரான நுஸ்ரத் பர்வீனின் ஹிஜாபை பீகாரின் முதலமைச்சர் நிதிஷ் குமார் இழுத்து அவமதித்திருந்த நிலையில், நுஸ்ரத் பர்வீன் இன்னும் வேலையில் இணையாமல் இருக்கிறார். வேலையில் சேர இறுதிநாள் டிசம்பர் 31. 

கேரள முதல்வர் பினராயி விஜயன்

மதமாற்றக் குற்றச்சாட்டின் பேரில் நாக்பூரில் ஒரு மலையாள கிறிஸ்தவ பாதிரியார், அவரது குடும்பத்தினர், உதவியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே ஜபல்பூரில் பார்த்தது போல, சிறுபான்மையினரை குறிவைத்து பிரிவினைவாதத்தை தூண்டும் சங் பரிவாரத்தின்  போக்கை இது காட்டுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பு சுதந்திரங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன.

சிபிஐ(எம்) மாநிலங்களவை எம்.பி., ஜான் பிரிட்டாஸ்

திட்டமிட்டு தூண்டிவிடப்பட்ட வெறுப்பு மற்றும் பிரி
வினைவாத அரசியலுக்காக நாம் பெரும் விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். பரேலியில் நடந்த சம்பவம் ஒரு தனி நிகழ்வு அல்ல.  அது தீவிரமான ஒரு நோயின் அறிகுறி மட்டுமே.  பாரபட்சம் மற்றும் சகிப்பின்மை என்ற அந்த  நோயின்  மூல காரணத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.