அமெரிக்காவில் சூரிய சக்தி மின் சார ஒப்பந்தங்களைப் பெற கடந்த 2020-2024 காலகட்டத்தில் இந்திய அரசு அதி காரிகளுக்கு, பிரதமர் மோடியின் நெருங் கிய நண்பரான கவு தம் அதானி நிறுவனம் ரூ. 2,029 கோடி லஞ் சம் கொடுத்ததாக அமெரிக்கப் பங்குச் சந்தை கண்காணிப்பு ஆணையம் அந் நாட்டு உயர்நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, அவரது மருமகன் சாகர் அதானி உட்பட 7 பேருக்கு நியூயார்க் பெடரல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித் துள்ளது. இந்நிலையில், அதானி மீதான குற்றச் சாட்டு குறித்து விசாரணை நடத்த உத்தர விடக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதானி - ஹிண்டன்பர்க் தொடர்பான வழக்கில் புதிய மனுவாக இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதி மன்ற மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,“ஹிண்டன்பர்க் விவகாரத்திற் கும் தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு களுக்கு தொடர்பு இருக்கலாம். எனவே தேச நலனைக் கருத்தில் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.