states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கார்ட்டூனிஸ்ட் மஞ்சுல்

மற்ற நாடுகளில் யாராவது பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டால் குற்றவாளியின் இருப்பிடத்திற்கு காவல்துறை செல்கிறது. ஆனால் நம் நாட்டில் உள்துறை அமைச்சர் செல்கிறார். இது எந்த மாதிரியான உருவாக்கம் என்று தெரியவில்லை.

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர்

மாநிலங்கள் நன்றாக வளர்ந்தால் அரசியல் செல்வாக்கை இழக்கக்கூடாது. ஆனால் தென் மாநிலங்கள் இப்போது நிதி பழிவாங்கல் மற்றும் மொழியியல் ஓரங்கட்டலை எதிர்கொள்கின்றன. எங்களுக்கு சமமான தீர்வுகள் மட்டுமே தேவை. அதிகமான குழந்தைகள் இல்லை.

ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்

சர்வதேச அரசியல் பார்த்திராத அளவுக்கு பரபரப்பான ஒரு ‘ரியலிட்டி’ நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஞ்சும் வகையில் அரங்கேறியிருக்கிறது டிரம்ப்-ஜெலன்ஸ்கி நிகழ்ச்சி. மோசமாக நடந்து கொள்பவர் வெற்றி பெறுவார். பார்வையாளர்களுக்கும் நல்ல பொழுது போக்கு நிகழ்ச்சியாக அமைந்தது. ஆனால் அவர்கள் பேசியது கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை பற்றி என்பதுதான் ஒரே பிரச்சனை.

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்

பீகார் அமைச்சர்களின் பெயர்களை காகிதத்தைப் பார்க்காமல், முதலமைச்சர் நிதிஷ் குமார் படித்தால் நான் அரசியலைக் கைவிட்டு அவருக்காக வேலை செய்யத் தொடங்குவேன்.