8 பேரும் உயிரிழப்பு தெலுங்கானா சுரங்க விபத்து
தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் அம்ரா பாத்தில் ஸ்ரீசைலம் அணை யில் புதிதாக சுரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. தோமலபென்ட்டா என்ற பகு தியில், அதாவது சுரங்கத்தின் தொடக்க இடத்தில் இருந்து 14ஆவது கி.மீ., தொ லைவில் சுரங்க பாதையில் பிப்ரவரி 22ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 40க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பிய நிலையில், உத்தரப்பிரதே சத்தைச் சேர்ந்த திட்டபொறியாளர்கள் மனோஜ் குமார், களபொறியாளர் ஸ்ரீநிவாஸ், ஜார்க்கண்ட்டை சேர்ந்த ஊழி யர்கள் சந்தீப் சாஹு, ஜக்தா ஜெஸ், சந்தோஷ் சாகு, அனுஜ் சாகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ஆப்ரேட்டர் சன்னி சிங், பஞ்சாபைச் சேர்ந்த ஆப்ரேட்டர் குர்பிரீத் சிங் ஆகிய 8 பேர் சுரங்கத்தில் சிக்கினர்.
8 பேரையும் மீட்க ராணுவம், கடற் படை கமாண்டோக்கள், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர், அறி வியல் - புவியியல் துறையினர், தனியார் தொழில்நுட்பக் குழுவினர், எலிவளை தொழிலாளர்கள் என பிரம்மாண்ட மீட்புக் குழு தேடுதல் பணியில் ஈடுபட்டது. குறிப்பாக 2023ஆம் ஆண்டு உத்தர கண்ட் மாநிலம் சில்க்யாரா சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவை சேர்ந்த 6 வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டது. ஆனால் 8 தொழிலாளர்கள் உயி ருடன் இருக்க மிக குறைவான வாய்ப்பே உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலை யில், மண் சரிவில் சிக்கிய 8 பேரும் ஒரு வாரத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப் பட்டுள்ளனர். இதில் 5 பேரின் உடல் கள் சேற்றில் புதைந்தும், மற்ற 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி உடைந்த இயந்தி ரத்தின் அடியில் சிக்கி மரணம் அடைந்தது உறுதியாகி உள்ளது.