“கணக்கு”ப் பண்ணுங்க..
ஆம்.. உண்மையிலேயே இது ஒரு பிரச்சனைதான்.. என்கி றார் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களில் ஒருவரான அங்குஷ் சபர்வால். கணிதப் பாடம் குறித்த கவலை யைத்தான் அவர் இப்படிக் கூறு கிறார். இந்தியாவில் இருந்து பெரிய அளவில் கணிதம் குறித்த ஆய்வுத் தாள்கள் வருவதில்லை. ஓரளவு ஆய்வுகள் நடப்பதும் தென் மாநிலங்களில்தான் நடக்கின்றன. இதே காரணத்தால்தான் மிகவும் ஆழமான ஆய்வுகளைச் செய்யக் கூடிய தொழில்நுட்ப நிறுவனங்க ளும் இந்தியாவில் உருவாக வில்லை. அதே நேரத்தில் கணி தப்பாடத்தில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் சீனாவின் நிலைமை வேறுவகையாக உள்ளது. அங்கு கணித ஆய்வுகளுக்குப் பெரும் முக்கி யத்துவம் தரப்படுகிறது. அதனால்தான், செயற்கை நுண்ணறிவு குறித்த ஆழமான ஆய்வுகள் அங்கு நடக்கின்றன என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
“அறிவியல்” பார்வை..?
ராஜஸ்தான் மாநில பட்ஜெட் கூட்டத்தொ டரில் ஆளும் பாஜக எம்.எல்.ஏ. பகதூர் சிங் கோலி, இது “ஆண்குழந்தை பட்ஜெட்” என்றும், முன்பு காங்கிரஸ் போட்டது “பெண் குழந்தை பட்ஜெட். ஆண் குழந்தையைத் தருபவர்கள் தான் பயனுள்ளவர்கள்” என்று கூறினார். பாஜக உறுப் பினர்கள் அனைவரும் நக்கல் தொனியில் சிரித்தி ருக்கிறார்கள். ஆண் குழந்தை என்றால் வரவேற் பார்கள்.. அதனால் இது நல்ல பட்ஜெட்.. பெண் குழந்தை என்றால் ஒப்பாரிதான்.. மோசமான பட்ஜெட்.. என்று வெளியில் வந்தபிறகும் தனது பேச்சை நியாயப்படுத்தியிருக்கிறார். பெண்களுக்கு எதிரான பார்வை கொண்டவர் சட்டமியற்றுபவராக அமர்ந்திருப்பது வெட்கக்கேடு என்று எதிர்க்கட்சி கள் குற்றம் சாட்டியுள்ளன. அண்மையில் நடந்த தொழில்நுட்ப மாநாட்டில் பாஜக ஒன்றிய அமைச் சர்கள் அறிவியல் பார்வை வேண்டும் என்று பேசினர். இதுதான் அந்தப் பார்வையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“வேதியியல்” வேலை செய்யுது..!
2023 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் பெமத்ரா மாவட்டம் பிரார்பூரில் 55 வயதான உமத் முகமது. அவரது 35 வயது மகன் இதுல் முகமது ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட னர். அந்த மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக இது நடந்தது. திட்டமிட்டு நடத்தப்பட்ட மதவெறிக் கொலை என்பது அனைவருக் கும் தெரிந்த ஒன்றுதான். கொலை நடந்த இரண்டு நாட்க ளுக்கு முன்பாக, மதவெறிக் கலவரம் ஒன்றும் நடந்தது. இரண்டு சிறுவர்களுக்கு இடையிலான பெரிய காரணம் எதுவுமில்லாத சண்டையை, விஸ்வ இந்து பரிசத் தூண்டி விட்டுக் கலவரமாக்கியது. பெரும் வன்முறை எழுந்தது. பாதுகாப்புகளை மீறி நடந்த இந்தக் கொலை யில் தொடர்புடைய 17 பேர் கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவானது. அவர்கள் அமர்வு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆட்சி மாற்றத்தால் காவல்துறை, மதவெறி அமைப்புகள் “கெமிஸ்ட்ரி” வேலை செய்கிறது என்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள்.
வேற லெவல் “பொருளியல்”
பீகார் மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி நிலேஷ் ராமச்சந்திர தியோரே தனது குடும்பத்தினருடன் தனி விமா னத்தில் பயணித்துள்ளார். இவர் மாநில சுற்றுலாத் துறையில் சிறப்பு செயலாளராகப் பணிபுரிகிறார். கடந்த ஆண்டில் ஒருமுறை தில்லியில் இருந்து பாட்னாவுக்கு சிறப்புத் தனி விமானத்தில் வந்த விவகாரம், பீகார் சட்ட மன்றத்தில் எழுந்துள்ளது. முதல்வரும், பல மூத்த அதி காரிகளையும் கொண்டு போய் தில்லியில் விட்டு விட்டு காலியாகத்தான் அந்த விமானம் திரும்பியிருக்கும் என்று அரசுத்தரப்பில் முட்டுக் கொடுத்தாலும், இது போன்று பல முறை திரும்பியிருக்கின்றன. வாடகை விமானங்கள் ஒரு வழிக்கு மட்டும்தான் அமர்த்தப்படும் என்று எதிர்க்கட்சிகள் குடைந்து எடுத்துள்ளன. நிதிஷ் குமார் ஆட்சியில் பீகார் “செழிப்பாக” இருக்கிறது என்று கிண்டலடித்துள்ளனர். உங்களுடையது “வேற லெவல் பொருளியல்” என்று சமூக வலைத்தளங்களில் பொரிந்து தள்ளுகின்றனர்.
