அமிர்தசரஸ் குருத்வாராவில் குண்டு வெடிப்பு பஞ்சாப்பில் பதற்றம்
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கண்ட்வாலாவில் உள்ள குருத்வாராவிற்கு (சீக்கியர்களின் புனித தளம்) வெளியே மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் குருத்வா ராவின் சுவர்கள் தேசமடைந்தன, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. குண்டு வெடிப்பு சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், கண்ட்வாலா பகுதி, அமிர்தசரஸ், லூதியானா என பஞ்சாப் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இச்சம்பவம் குறித்து அமிர்தசரஸ் காவல் ஆணையர் குர்ப்ரீத் சிங் புல்லர் கூறுகையில்,”இந்தச் சம்பவம் குறித்து அதிகாலை 2 மணிக்கு குருத்வாரா பூசாரி காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து நானும் மற்ற உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்றோம் என அவர் கூறினார்.
மகாராஷ்டிராவில் சோகம் நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் பத்லாப்பூர் பகுதி யில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15-16 வயது சிறுவர்கள் ஹோலி பண்டிகை யை கொண்டாடிவிட்டு, உடலில் இருந்த வண்ணங்களை கழுவுவதற்காக உல்ஹாஸ் ஆற்றில் குளிக்க திட்டமிட்டு இறங்கியுள்ளனர். அப்போது ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள் ளனர். ஆனாலும் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16) ஆர்யன் சிங் (16) ஆகிய 4 பேரும் அடுத்தடுத்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மற்ற சிறுவர்கள் உட னடியாக உள்ளூர்வாசிகள், காவல்துறை மற்றும் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை யினர் மற்றும் மீட்புக் குழுவினர் நீரில் மூழ்கியவர்களை மீட்டு 4 சிறுவர்க ளின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரி சோதனைக்காக பத்லாப்பூர் மருத்துவ மனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப் பட்டு விசாரணை நடந்து வருகிறது.