states

img

ஹோலி பண்டிகையின் போது பாலியல் வன்முறை

ஹோலி பண்டிகையின் போது பாலியல் வன்முறை

வடமாநிலங்களின் முக்கியப் பண்டிகை களில் ஒன்றான ஹோலி பண்டிகை வெள்ளிக்கிழமை கொண்டாடப் பட்டது. இந்த ஹோலி பண்டிகையின் போது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை சம்பவங்கள் மிக மோசமான அளவில் நிகழ்ந் துள்ளன. “உமன்ஸ் ஆப் இந்தியா (WOMENS OF INDIA)” என்ற இன்ஸ்டாகிராம் ஊடகம் வட மாநிலங்களில் ஹோலி பண்டிகையின் போது நிகழ்ந்த பெண்களுக்கு எதிரான பாலியல் சம்ப வங்களின் வீடியோ தொகுப்பை வெளி யிட்டுள்ளது.  அதில்,  1. ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு வேலை விஷயமாக இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்ற இளம் பெண் மீது 2 இளைஞர்கள் வண்ணப் பொடியை தூவி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.  2. ஹோலியை முன்னிட்டு கங்கை நதியில் வழி படச் சென்ற (வாரணாசி பகுதி போன்று இருக்கிறது) புதிதாக திருமணம் செய்த இளம் பெண் மீது அவரது கணவர் இருக்கும் போதே வண்ணப் பொடி கலந்த தண்ணீர் ஊற்றி பாலியல் ரீதியாக 4க்கும் மேற்பட்ட இளைஞர்கள் துன்புறுத்தினர். 3. சாலையில் சென்ற சிறுமியை பாலியல் ரீதி யாக துன்புறுத்தி, அச்சிறுமியின் தலையில் முட்டையை உடைத்து 2 இளைஞர்கள் துன் புறுத்தும் காட்சி வீடியோவில் பதிவாகி யுள்ளது. இதே போல ஹோலி பண்டிகையின் போது  பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பல் வேறு பாலியல் வன்முறை சம்பவங்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோவாக டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது. பாஜக ஆளும்... இந்த பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும் பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நிகழ்ந்தவை என இன்ஸ்டாகிராம் வீடியோ லொக்கேஷன் (LOCATION) மூலம் கண்டறி யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. குறிப்பாக காவி வண்ண உடை அணிந்த இந்துத்துவா குண்டர்கள் அரசியல் ஆதாயத்திற்காக வன்முறையை தூண்டும் விதமாக முஸ்லிம் மக்கள் மீது தாக்குதலுடன், பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைச் சம்பவங்களை நிகழ்த்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜார்க்கண்டில் முஸ்லிம் மக்கள் மீது  இந்துத்துவா கும்பல் தாக்குதல்

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் நடந்த ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தில் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் தாக்குதல் நடத்தப் பட்ட சம்பவம் நிகழ்ந் துள்ளது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மை யாக வசிக்கும் கோத் தம்பா சவுக் பகுதியில் பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்கள் ஹோலி ஊர்வலம் மேற் கொண்டனர். இந்த ஊர்வலத்தின் போது முஸ்லிம் மக்களின் வீடு மற்றும் வாகனங்க ளில் பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வண்ணப்பொடிகளை அள்ளி வீசினர். இதற்கு முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு தெரி விக்க, இந்துத்துவா குண்டர்கள் கோத் தம்பா சவுக் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் பல வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். தகவலறிந்த காவல்துறை யினர் தடியடி நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

பள்ளி மாணவிகள் மீது ரசாயனம் கலந்த வண்ணப்பொடி வீச்சு

கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் லக்ஷ்மேஷ்வர் நகரில் வெள்ளிக் கிழமை அன்று பள்ளி மாணவிகள் 7 பேர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டு இருந்தனர். அப்போது 3 இருசக்கர வாகனங்க ளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஹோலி பண்டிகை கொண்டாட்டம் என்ற பெயரில் 7 மாணவிகள் மீதும் ரசாயனம் கலந்த வண்ணப் பொடிகளை வீசினர். இதனால் மாணவிகள் 7 பேருக்கும் மூச்சுத் திணறல், இருமல், நெஞ்சுவலி ஏற்பட்டது. தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளை கதக் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆராய்ந்து, குற்றவாளி களை தேடும் பணியில் கர்நாடக காவல்துறை யினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பாஜக ஆளும் ராஜஸ்தானில் கொடூரம்
முஸ்லிம் இளைஞர் என இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக்கொலை

பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் ஹோலி கொண்டாட் டத்தின் போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும், பெண்கள், சிறுமிக்கு எதிராகவும் பல்வேறு அடாவடிச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால் பாஜக ஆதரவு பெற்ற கோடி மீடியா ஊடகங்கள் இந்த சம்பவத்தை மூடி மறைத்துள்ளன. குறிப்பாக தௌசா மாவட்டத்தில் ஹோலி பண்டிகையின் போது வண்ணப்பொடி பூசுவதைத் தடுக்க முயன்ற 25 வயது இளைஞர் ஒருவர் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரால்வாஸ் கிராமவாசிகளான அசோக், பப்லு , கலுராம் ஆகியோர் ஹன்ஸ்ராஜ் என்ற இறந்தவரின் மீது வண்ணப் பொடியை பூச உள்ளூர் நூலகத்திற்குச் சென்றனர். ஆனால் ஹன்ஸ்ராஜ்,”என் மீது வண்ணப் பொடி பூச வேண்டாம்” என மறுத்தார். ஹன்ஸ்ராஜ் முஸ்லிமாக இருப்பார்; அதன் காரணமாகவே அவர் வண்ணப்பொடிகளை பூச மறுக்கிறார் என அந்த கும்பல் கழுத்தை நெரித்துக் கொன்றது. தலைமறைவான 3 பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.