கும்பமேளா படகோட்டிக்கு ரூ.12.8 கோடி வரி
வருமானவரித்துறை நோட்டீஸ்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் ஜனவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடை பெறும் கும்பமேளா நிகழ்வு நடை பெற்றது. 45 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தை ஒட்டியுள்ள அரயில் கிராமத்தைச் சேர்ந்த பிண்ட்டு மெஹ்ரா என்ற படகோட்டும் குடும்பம் ரூ.30 கோடி சம்பாதித்தது. இதனை உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் பெருமையுடன் கூறி யிருந்தார். இந்நிலையில், பிண்ட்டு மெஹ்ரா வுக்கு வருமான வரி சட்டம் 1961, பிரிவு 4 மற்றும் 68இன் கீழ் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. அதாவது 45 நாட்களில் ரூ.30 கோடி வருமானம் ஈட்டி யதற்காக, ரூ.12.8 கோடி வரி செலுத்த வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.