ஹோலி கொண்டாட்டத்தின் போது பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்கள் அட்டூழியம்
மகாராஷ்டிரா - ரத்னகிரியில் மசூதி மீது தாக்குதல்
மார்ச் 31 ஆம் தேதி கொண்டாடப்பட வுள்ள ரம்ஜான் பண்டிகைக்காக முஸ்லிம் மக்கள் தற்போது நோன்பு இருந்து வருகின்ற னர். நோன்பு நாட்களின் போது தொழுகை செய்யும் நாளான வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம் மக்கள் சிறப்பு நமாஸ் (தொழுகை) மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், வடமாநிலங்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான ஹோலி பண்டிகையும் வெள்ளிக்கிழமை அன்று கொண்டாடப்பட்டது. தொழுகை நாள் - ஹோலி பண்டிகை ஒரே நாளில் வந்ததை சாதகமாகப் பயன்படுத்தி, பாஜக - ஆர்எஸ்எஸ் குண்டர்கள் வடமாநிலங்களின் பெரும்பாலான இடங்களில் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர். பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி அருகே ஜவஹர் சௌக்கில் இந்துத்துவா கும்பல் ஹோலி பண்டிகைக்காக “மடாச்சி மிரவ்னுக்” என்ற சடங்கு மரத்தை வைத்து அங்குள்ள மசூதியின் கதவை இடிக்க முயன்றனர். மசூதி நிர்வாகத்தினர், முஸ்லிம் மக்கள், காவல்துறையினர் இதனை தடுக்க முயன்றனர். ஆனால் இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதால், ரத்னகிரி மாவட்டத்தில் வெள்ளியன்று இரவு முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. உ.பி.,யில் 144 தடை உத்தரவு பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அசம்பாவிதத்தை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் மாநிலம் முழு வதும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள், மசூதி உள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை அன்று அறிவிக்கப்படாத 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சம்பல் பகுதியில் கொரோனா வில் விதிக்கப்பட்டது போல ஊரடங்கு விதிக்கப் பட்டது. அதே போல உத்தரப்பிரதேச பாஜக முதலமைச்சர் ஆதித்யநாத் உத்தரவின் பேரில் மசூதிகள் தார்பாயால் மூடப்பட்டன. முஸ்லிம் மக்கள் மசூதி செல்ல அனுமதிக்கப் படவில்லை; தெருக்களில் நடமாடவிட வில்லை; அத்தியாவசியப் பொருட்கள் வாங்க காவல்துறை அனுமதிக்கவில்லை. மசூதி அருகே ஹோலி கொண்டாட்டம் ஆனால் ஹோலி பண்டிகைக்கு மட்டும் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக அனுமதி வழங்கினர். சில பகுதிகளில் வன்முறையை தூண்டும் விதமாக மசூதி உள்ள பகுதிகளில் வன்முறையை தூண்டும் வகையில் இந்துத்துவா குண்டர்கள் ஹோலி கொண்டாடினர். இதற்கு முஸ்லிம் மக்கள், எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.