states

img

கையை நீட்டி கேள்வி எழுப்பிய பாஜக எம்.பி., மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை

கையை நீட்டி கேள்வி எழுப்பிய பாஜக எம்.பி., மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வியாழனன்று காலை  மக்களவையில் மேற்கு வங் கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ்  எம்.பி., ஒருவர் அவையில் இ-சிகரெட்டுக ளை புகைத்ததாக பாஜக எம்.பி., அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். மேலும் மக்க ளவை  சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், “இ-சிகரெட்டுகள் அவையில் அனுமதிக்கப் படுமா? அவையில் யாராவது இ-சிகரெட் புகைக்க அனுமதிக்கிறீர்களா?” என்று கையை நீட்டியவாறு கேள்வி எழுப்பினார். உடனே சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக எம்.பி., அனுராக் தாக்கூரை நோக்கி,“நீங்கள் என்னிடம் கேள்வி கேட்க முடியாது? எப்படி கேள்வி கேட்கலாம்?” என காட்டமாக பேசி எச்சரிக்கை விடுத்தார். அனுராக் தாக்கூர் அமைதியானார். அதன்பின் சபாநாயகர் ஓம் பிர்லா,“அவையில் யாரும் இ-சிகரெட் புகைக்க அனுமதிக்கப்படவில்லை.  அதற்கு அனுமதியும் இல்லை” என கூறினார். சபாநாயகரின் காட்டமான பேச்சால் மக்க ளவை சிறிது நேரம் அமைதியானது.