states

img

பாஜக தலைவருக்கு 40 வருட சிறைத்தண்டனை

பாஜக தலைவருக்கு 40 வருட சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவின் சிட்னி  நகரில் வசிக்கும் இந்திய  வம்சாவளியான பாலேஷ்  தன்கர் (43) பாஜகவின் வெளிநாடு  வாழ் இந்தியர்களின் தலைவராக வும், இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராகவும் உள்  ளார். ஏபிசி, பிரிட்டிஷ் அமெரிக்கன்  டொபாக்கோ, டொயோட்டா மற் றும் சிட்னி ரயில்ஸ் உள்ளிட்ட பல்  வேறு நிறுவனங்களில் பணியாற் றிய பாலேஷ் தன்கர் சொந்தமாக ஒரு நிறுவனம் வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள தனது  தொழில் நிறுவனத்தில் பாலேஷ் தன்கர் வேலை தேடிவந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்  காரம் செய்துள்ளார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில்  சிட்னி காவல்துறை பாலேஷ் தன்கர்  நிறுவனத்தில் சோதனை மேற் கொண்டது. இந்த சோதனையில் மயக்க மருந்துகள் மற்றும் கடி காரத்தினுள் மறைத்து வைக்கப் பட்ட கேமரா ஆகியவை பறிமுதல்  செய்யப்பட்டன.

கேமராவில் 5 தென்  கொரியாவைச் சேர்ந்த பெண் களை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவும் பதிவாகி இருந்தது. இதனையெடுத்து பாலேஷ் தன்கர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு இருந்த வழக்குகள்  மற்றும் பாலியல் வழக்குகள் அனை த்தும் சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்  பட்டன. 13 பாலியல் வன்கொடுமை கள் உட்பட 39 குற்றங்களில் குற்ற வாளி என மாவட்ட நீதிமன்ற நீதி பதி மைக்கேல் கிங் தீர்ப்பு வழங்கி னார். இந்த வழக்கின் தீர்ப்பில், “பாலேஷ் தன்கர் பெண்களை பாலி யல் பலாத்காரம் செய்யவே  முன்  னேற்பாடாக வேலை தருவதாக தனது நிறுவனத்திற்கு அழைத் துள்ளார். பெண்கள் மீதான பாலி யல் வன்கொடுமை சிக்கலாக திட்ட மிடப்பட்டது மற்றும் மிகவும் கொடூர மானது ஆகும். குறிப்பாக இளம்  பெண்களுக்கு எதிராக திட்டமிடப்  பட்ட கொடூரமான நடத்தையின் தொடர்ச்சியாகும். இதனால் பாலேஷ் தன்கருக்கு 40 வருட  சிறை தண்டனை விதிக்கப்படு கிறது. 2053 வரை 30 ஆண்டுகளு க்கு அவருக்கு பரோல் வழங்கப் பட முடியாத படி தீர்ப்பில் உத்த ரவாதம் அளிக்கப்படுகிறது” என  மாவட்ட நீதிமன்ற நீதிபதி மைக் கேல் கிங் உத்தரவிட்டார். தங்க ரின் 40 ஆண்டுகள் முழு தண்டனை யும் முடிந்தபோது அவருக்கு 83 வயது இருக்கும்.