அதிஷியின் எம்எல்ஏ பதவியை பறிக்க பாஜக தீவிரம்
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தில்லி மாநில சட்டமன்ற தேர்த லில் ஆம் ஆத்மி மூத்த தலைவ ரும், முன்னாள் முதலமைச்சருமான அதிஷி கல்காஜி தொகுதியில், வெறு ப்புப் பேச்சுக்கு பெயர் பெற்ற பாஜக மூத்த தலைவரான ரமேஷ் பிதூரியை வீழ்த்தி எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றார். தற்போது அதிஷி தில்லி மாநில எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். இந்நிலையில், கல்காஜி பகுதியில் வசிக்கும் பாஜகவிற்கு நெருக்கமான வர்களாக கூறப்படும் கமல்ஜித் சிங் துக்கல், ஆயுஷ் ராணா ஆகிய இரு வரும் அதிஷியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதிஷி மற்றும் அவரது தேர்தல் முகவர்களும் தேர்த லின் போது ஊழல் நடைமுறைகளைப் பயன்படுத்தியதாக மனுவில் கூறப் பட்டுள்ளது. இந்த மனு புதன்கிழமையன்று விசார ணைக்கு வந்தது. விசாரணை முடிவில் இந்தியத் தேர்தல் ஆணையம், தில்லி காவல்துறை, கல்காஜி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் அதிகாரி ஆகியோ ருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதி சிங்.