மும்பை எதிர்க்கட்சிகளின் முக்கியத் தலைவர்களை வளைக்கும் பாஜக நாட்டின் பிரசித்தி பெற்ற மாநக ராட்சிகளில் ஒன்றான மும்பை மாநகராட்சியையும் எப்படியா வது கைப்பற்ற வேண்டும் என்ற எண் ணத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பல்வேறு சித்துவிளையாட்டு களை அரங்கேற்றி வருகின்றன. இந்நிலையில், மும்பையில் “இந் தியா” கூட்டணிக் கட்சிகள் வலுவாக இருப்பதால் தோல்வி பயத்தில் அக்கூட்ட ணிக் கட்சிகளின் முக்கியத் தலைவர் களை வளைக்கும் வேலையை பாஜக துவங்கியுள்ளது. இதன் முதல்படியாக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா கட்சியின் துணைத் தலைவரும், ஆதித்ய தாக்கரேவின் (உத்தவ் தாக்கரே மகன் மற்றும் கட்சியின் பொதுச்செயலா ளர்) நெருங்கிய உதவியாளருமான ஷீத்தல் தேவ்ருக்கர் - ஷேத் தனது பதவி யை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவர் விரைவில் மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர் ரவீந்திர சவான் முன்னி லையில் பாஜகவில் இணையவுள்ளதாக வும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஷீத் தல் யுவ சேனாவின் (சிவசேனா இளைஞர் அணி) உயர்மட்டக் குழு உறுப்பினர் மற்றும் மும்பை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் என முக்கியப் பொறுப்பு களில் உள்ள நிலையில், திடீரென அவர் சிவசேனா (உத்தவ்) கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளது மகாராஷ்டிரா அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷீத்தல் மட்டுமின்றி காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்) உள்ளிட்ட “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் முக்கி யத் தலைவர்களை வளைக்க பாஜக குதிரை பேரத்தில் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.