செயற்கை நுண்ணறிவு மாநாடு மோசமான திட்டமிடல், பாதுகாப்புக் குறைபாடு, திருட்டு முதல் நாளிலேயே அவமானத்தை உருவாக்கிய பாஜக அரசு
புதுதில்லி தலைநகர் தில்லியில் செயற்கை நுண்ண றிவு தாக்க மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் முதல் நாளிலேயே முறையற்ற திட்டமிடல், பாதுகாப்புக் குறைபாடு காரணமாக திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று இந்தியா விற்கு சர்வதேச பிரதிநிதிகள் மத்தியில் அவமா னத்தை உருவாக்கி கொடுத்துள்ளது பாஜக அரசு. தெற்குலக நாடுகளில் முதல் முறையாக இந்தியாவில் நடத்தப்படும் செயற்கை நுண்ண றிவு மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கரு தப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக வும் பார்வையிடவும் நாடு முழுவதும் இருந்தும், 100-க்கும் மேற்பட்ட வெளி நாடுக ளைச் சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். அவர்களில் பலர் பாதுகாப்புச் சோதனை என்ற பெயரிலும் நுழைவாயிலில் இருந்த பிற தடைகளாலும் நீண்ட வரிசையில் காக்க வைக் கப்பட்டனர். அதே நேரத்தில் விஐபி-க்கள் நீண்ட வரிசைகளைக் கடந்து மிக அலட்டலாகவும் விரைவாகவும் உள்ளே சென்றனர். இத்தகைய மோசமான கூட்ட மேலாண்மை யால் அசவுகரியமும் அதிருப்தியும் அடைந்த பார்வையாளர்கள் பலர் சர்வதேச அளவிலான ஒரு நிகழ்விற்கு, முறையான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லையென சமூக ஊட கங்களில் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள னர். நுழைவாயில்கள் மூடப்பட்டிருப்பதால், ஏஐ உச்சிமாநாட்டில் எனது சொந்த அரங் குக்கே (booth) என்னால் செல்ல முடிய வில்லை. நீங்களும் வெளியே சிக்கியிருந்தால், ‘Bolna’ குழுவைச் சந்திக்க விரும்பினால் எனக்கு மெசேஜ் செய்யுங்கள் என்று ஏஐ குரல் ஸ்டார்ட்-அப் நிறுவனமான போல்னா வின் (Bolna) இணை நிறுவனர் மைத்ரேயா வாக் அவருடைய எக்ஸ் (X) கணக்கில் பதிவிட்டுள்ளார். குறிப்பாக ஒவ்வொரு நபருக்கும் அத்தியா வசியமாக இருக்கும் குடிநீர், கைப் பை, கார் சாவிகள் போன்ற எதையும் அரங்கிற்குள் கொண்டு வரக்கூடாது என உத்தரவு இருப்பதால் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட தாக ஒரு பார்வையாளர் தெரிவித்துள்ளார். இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? மேலும் போதுமான இருக்கை வசதிகள் இல்லாதது, வைஃபை (WiFi) வசதி இல்லா தது, அதன் விளைவாக டிஜிட்டல் பணப்பரி வர்த்தனைகள் செய்ய முடியாமல் போனது. ரொக்கப் பணத்தை மட்டுமே வாங்குவோம் என சில விற்பனை நிலையங்கள் சொல்லி விட்டதனால் பலருக்கு உணவு மற்றும் தண்ணீர் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. நிகழ்வின் போது பதிவு செய்யும் முறை (registration system) பலமுறை செயலிழந்ததாகவும் பலர் புகார் கூறியுள்ளனர். இதனை குறிப்பிட்டு செயற்கை நுண்ண றிவு மாநாட்டிலேயே டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்றால் இதுதான் டிஜிட்டல் இந்தியாவா? என கேள்வியும் எழுப்பியுள்ளனர். பிரதமர் இருக்கும் போதே திருட்டு பிரதமர் மோடியும் அவரது பாதுகாப்புப் படையும் இருந்த போதே ‘நியோசேபியன்ஸ்’ (NeoSapiens) ஏஐ நிறுவனத்தின் பொருட்கள் திருடப்பட்டுள்ளன. இதனை அந்நிறுவனத்தின் நிறுவனர் தனது எக்ஸ் பக்கத்திலும் தெரிவித்துள்ளார். ஒரு சர்வதேச நிகழ்வில் நாட்டின் தலைவர் இருந்த நேரத்தில் நடந்துள்ள இந்த திருட்டுச் சம்பவம் மாநாட்டின் பாதுகாப்பு பற்றி பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது. மன்னிப்புக் கோரிய அஸ்வினி வைஷ்ணவ் சர்வதேச பார்வையாளர்கள் பங்கேற் பாளர்களுடன் நடைபெறும் மாநாட்டில் மிகப்பெரிய குளறுபடிகள் எழுந்து வரும் நிலையில் ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சாவர்க்கர் பாணியில் மன்னிப்புக் கோரியுள்ளார். எனினும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கக் கூடிய ஒரு சர்வதேச அளவி லான மாநாடு பாஜகவின் நிர்வாகத் தோல்வி யால் நாட்டிற்கு அவப்பெயரை உருவாக்கு கிறது என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சீன ரோபோவை தங்களுடையது என பொய் சொன்ன பல்கலை.
இம்மாநாட்டில் சீன ரோபோ நாயை தங்களது சொந்தத் தயாரிப்பு என சொல்லி நொய்டாவைச் சேர்ந்த கல்ஃகோட்டியாஸ் என்ற தனியார் பல்கலைக்கழகம் காட்சிப்படுத்தியுள்ளது. சீனாவிலிருந்து 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கக்கூடிய nitree Go2 என்ற ரோபோ நாயை வாங்கிவிட்டு “ஓரியன்” என்ற பெயரில் அதைத் தங்களது சொந்தப் படைப்பு என சர்வதேச மாநாட்டில் அப்பல்கலைக்கழகம் காட்டியது நாட்டுக்கே அவமானம். இவர்களை போன்ற குறுகிய எண்ணம் கொண்டவர்களால் தான் இந்தியா மீதான நம்பிக்கையும் மதிப்பும் சர்வதேச அளவில் குறைந்து கொண்டே வருகிறது என சமூக ஊடகத்தில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது. கல்ஃகோட்டியாஸ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு என்ற பெயரில் பல கோடிகளை பெற்று வருகிறது. குறிப்பாக காப்புரிமை தாக்கல் செய்ய இந்திய அரசு 5 லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. ஐஐடி (IIT) போன்ற முன்னணி நிறுவனங்கள் இணைந்து வெறும் 803 காப்புரிமைகளைத் தாக்கல் செய்யும் நிலையில், கல்ஃகோ ட்டியாஸ் மற்றும் லவ்லி புரொபஷனல் போன்ற பல்கலைக்கழகங்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காப்புரிமைகளைத் தாக்கல் செய்து பல கோடிகளை பெற்றது எப்படி என்ற கேள்வி உள்ளது. இந்நிலையில் தற்போதைய முறைகேடு அவர்களின் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது.
