states

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி பணப்பட்டுவாடா

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கூட்டணி பணப்பட்டுவாடா

பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலத்தில் செவ் வாயன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலை முன்னி ட்டு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1ஆம் தேதி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் (சிவசேனா, தேசியவாத காங்கி ரஸ்) வாக்காளர்களிடம் பணப்பட்டு வாடா செய்ததாக “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி பீட் நகரில் துணை முதலமைச்சர் அஜித் பவார் (தேசியவாத காங்கிரஸ்) கட்சியின் குண்டர்கள் வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்தபோது கையும் களவுமாகப் பிடிபட்டுள்ளனர். பீட் நகரின் நல்வாண்டி நாக்கா பகுதியில், இரவு 10:30 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்த போது “இந்தியா” கூட்டணிக் கட்சி யினர் பிடித்து காவல்துறையிடம் ஒப்ப டைத்தனர்.