சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜகவின் நட்சத்திர பிரச்சாரக்காரராக உ.பி., முதலமைச்சர் ஆதித்யநாத் செல்ல உள்ளார். அவர் நட்சத்திர பிரச்சாரக்காரர் இல்லை; நட்சத்திர பிரிவினைவாதி ஆவார். ஆதித்யநாத்தின் வகுப்புவாத பேச்சை பீகார் மக்கள் ஏற்க மாட்டார்கள்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது நிறுத்தப்படும் என இனிய நண்பர் வாக்கு கொடுத்திருப்பதாக மீண்டும் டிரம்ப் பேசி இருக்கிறார். ஆனால் அந்த இனிய நண்பர் (மோடி), டிரம்ப் பேசும்போதெல்லாம் மவுன சாமியாராகி விடுகிறார். மறுபக்கம் நாட்டின் வணிக பற்றாக்குறையோ அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
பாஜக ஆளும் மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து காரணமாக 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் அம்மாநில முதலமைச்சர் இந்த விவகாரத்தை மோசமாக கையாண்டு வருகிறார். இந்த விஷயத்தில் முழுமையான விசாரணையும், கடமையுணர்வும் தேவை. குழந்தைகள் உயிரிழப்பு சாதாரணமான விஷயம் அல்ல.
ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங்
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் பெயரால் பாஜக ரூ.250 கோடிக்கு மேலாக மெகா மோசடியை அரங்கேற்றியுள்ளது. பாஜக வெறும் நன்கொடை திருடர்கள் மட்டுமல்ல, தீவனத் திருடர்கள் கூட. பசுக்களின் தீவனத்தையும் பாஜக தின்றுவிட்டனர் (ஊழல்).