பீகார்: சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார் வேட்புமனுத்தாக்கல்
243 தொகுதிகளைக் கொண்ட பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் “இந்தியா” கூட்டணியில் (மாநில அளவில் மகா கூட்டணி) களமிறங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விபூதிப்பூர், கயாஹத், பிப்ரா, மஞ்ஹி உள்ளிட்ட 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று விபூதிப்பூர் தொகுதி சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார் வேட்புமனுத்தாக்கல் செய்தார். வேட்புமனுத்தாக்கல் மற்றும் தொடர்ந்து நடைபெற்ற வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டத்தில் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் அம்ரா ராம் எம்.பி., மாநிலச் செயலாளர் லாலன் சவுத்ரி மற்றும் ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ (எம்எல்), விஐபி உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.