நாடாளுமன்றத்தை முடக்கிய பாஜக
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொ டங்கியது. கூட்டத் தொடரின் கடைசி வாரத்தின் முதல் அமர்வு திங்க ளன்று தொடங்கியது. இந்நிலையில், தில்லியில் ஞாயி றன்று வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கி ரஸ் நடத்திய போராட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதாகவும், அவருக்கு அச்சுறுத் தல்களை ஏற்படுத்தியதாகவும் கூறி நாடாளுமனற மக்களவையில் பாஜக எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதிலடியாக எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் முழக்கங்களை எழுப்ப மக்க ளவை பரபரப்பானது. இந்த அமளி யால் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப் பட்டது. பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனை கிளப்பியதால் 2 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.
