states

img

“தேயிலை பயன்படுத்தாத பானங்கள் தேநீர் அல்ல”

“தேயிலை பயன்படுத்தாத பானங்கள் தேநீர் அல்ல”

தேயிலை பயன்படுத்தாத மூலிகை அல்லது தாவர பானங்களை தேநீர் என்று குறிப்பிடக் கூடாது  என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்  றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அறி வித்துள்ளது. இதுதொடர்பான அறி விப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதா வது: “தேயிலையில் தயாரிக்கப்படாத எந்த பானத்திற்கும் டீ (தேநீர்) என பெயர்  வைக்கக் கூடாது. அதாவது “கேமல்லியா சைனன்சிஸ் (Camellia sinensis)” என்ற தாவரத்தின் இலைகளில் இரு ந்து தயாரிக்கப்படுவது மட்டுமே உண்மையான தேநீர் ஆகும். தேயிலை பயன்படுத்தாமல், பிற தாவரங்களின் பூக்கள், இலைகள், வேர்கள் அல்லது விதைகளை சுடுநீரில் இட்டுத் தயா ரிக்கும் பானங்களை (டிசான்ஸ்) அல்லது  மூலிகை பானங்கள் தேநீர் அல்ல. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்கள் கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டும்” என இந்திய உண வுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  என்ன காரணம்? உண்மையான தேநீரில் இயற்கையா கவே “காபின் (Caffeine)” இருக்கும். ஆனால் பெரும்பாலான மூலிகை பானங்  கள் காபின் அற்றவை (Caffeine-free). இதய நோயாளிகள் அல்லது காபின் தவிர்க்க விரும்புபவர்கள் ‘மூலிகை தேநீர்’ என்று நம்பி குடிக்கும்போது குழப்  பம் ஏற்படலாம். பல நாடுகளில் உணவுத்  தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள், தேயிலை இல்லாத தயாரிப்புகளின் லேபிள்களில் “தேநீர்” என்ற சொல்லைப்  பயன்படுத்தக் கூடாது என விதிமுறை களை வைத்துள்ளன. தற்போது இந்தி யாவிலும் இது நடைமுறைக்கு வர வுள்ளது. இனிமேல் செம்பருத்தி அல்லது  ஆவாரம் பூ போன்றவற்றைத் தண்ணீ ரில் கொதிக்க வைத்து குடிக்கும்போது அதை ‘செம்பருத்தி குடிநீர்’ அல்லது  ‘செம்பருத்தி பானம்’ என்று அழைப் பதே முறையானது. ‘செம்பருத்தி டீ’  என்று அழைத்தால் கடும் நடவடிக்கை பாயலாம் என எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.